
2009 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளுக்குரிய தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளையும்; 2008-2009, 2009-2010 ஆகிய ஆண்டுகளுக்குரிய தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்பப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளையும் தேர்வு செய்வதற்காக, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் எஸ். மோகன் தலைமையில், திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமாகிய இராம நாராயணன், திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் பி. அமிர்தம், திரைப்பட நடிகரும் இயக்குநருமான.கே.பாக்யராஜ், திரைப்பட நடிகர்கள் வாகை சந்திரசேகர், சிவகுமார், சாருஹாசன், ஒய்.ஜி.மகேந்திரா,குமரி முத்து, நடிகை குஷ்பு, இசையமைப்பாளர் தேவா, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், எம்.ஜி.ஆர். திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட தேர்வுக் குழுவினை அமைத்து முதலமைச்சர் மு.கருணாநிதி 8.1.2011 அன்று ஆணையிட்டுள்ளார்.