தனது உதவி இயக்குனர்களுக்கு தனது தயாரிப்பு நிறுவனத்திலேயே படங்கள் இயக்குவதற்கு வாய்ப்பு அளிப்பதில் இயக்குனர் ஷங்கர் முன்னோடி.அவருக்கு அடுத்தபடியாக சினிமாவை அணு அணுவாக நேசிக்கும் ,சினிமா சார்ந்த விஷயங்களை/ நிகழ்ச்சிகளை மிகவும் பிரமாண்டமாக/ நேர்த்தியாக/ புதுமையாக செய்வதில் பெயர்பெற்ற இயக்குனர் கெளதம் வாசுதேவ மேனன் தன்னுடைய இணை இயக்குனர் அஞ்சனா விற்கு அளித்த வாய்ப்புதான் ”வெப்பம்” திரைப்படம்.
காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைத் தன் இசையால் கட்டிப்போட்ட ஜோஷ்வா ஸ்ரீதர் கல்லூரி திரைப்படத்தற்குப் பிறகு 2 ஆண்டுகள் கழித்து தமிழில் இசையமைத்திருக்கும் படம் வெப்பம். 2010 ல் பிரமாண்டமாக உள் நாட்டிலும் அயல் நாட்டிலும் பாடல்கள் வெளியிடப்பட்ட படங்களுக்கு மத்தியில் மிகவும் புதுமையாக பாடல்கள் வெளியிடப்பட்டது விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் வெப்பம். இரண்டுமே கெள்தம் வாசுதேவ மேனன் தயாரித்த படங்கள்.இசையில் அதிகம் ஆர்வம் கொண்ட கெளதம் வாசுதேவ மேனனே வெப்பம் திரைப்படத்தின் பாடல்களையும் ஃபோட்டான் கத்தாஸ் நிறுவனம் மூலமே உலகம் முழுவதும் வெளியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெண் இயக்குனர் அஞ்சனா இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் வெப்பம் படப்பாடல்களை தேசியவிருது பெற்ற நடிகையும் தமிழக பெண் இயக்குனர்களுக்கு முன்னோடியாகவும் விளங்கிக்கொண்டிக்கும் சுஹாசினி வெளியிட பூர்ணிமா பாக்யராஜ் தொடங்கி தமிழகத்தின் புகழ்பெற்ற இயக்குனர்கள் தரணி,சசி,பாலாஜி சக்திவேல், நாசர், கே.வி.ஆனந்த், ராதாமோகன்,பார்த்திபன்,வி.பிரியா மற்றும் நடிகர் விவேக் இவர்களுடன் வெப்பம் டீம் அஞ்சனா,கார்த்திக், நானி, நித்யாமேனன், பிந்து மாதவி ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் , தயாரிப்பாளர்கள் ஜி.வி.எம், மதன்,ஜெயராமன்,வெங்கட் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட சுஹாசினி கெளதம் வாசுதேவ மேனனுக்கு சினிமா மீது உள்ள காதலையும்,திரைப்படங்களை இயக்குவதில்அவரது பெர்ஃபெக்ஷனையும் ,ஈடுபாட்டினையும் பாராட்டிப்பேசினார். அஞ்சனாவிற்கும்,வெப்பம் அணிக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
முன்னதாக வெப்பம் திரைப்பத்தின் பாடல்கள் உருவான விதம்- இயக்குனர் அஞ்சனா , பாடலாசிரியர் நா.முத்துக்குமாரிடமும் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதரிடமும் காட்சிகளைச் சொல்லி இசையை வாங்கிய விதமும் நேரடியாகப்பாடல்கள் இசையமைக்கப்பட்டு கார்த்திக்,சூசன்,பின்னி தயாள் போன்ற பாடகர்கள் பாடிய காட்சிகளும் அவர்களிடம் கெளதம் வாசுதேவ மேனன் வெப்பம் திரைப்படத்தினைப் பற்றி உரையாடிய நிகழ்ச்சிகளும் படம்பிடிக்கப்பட்டு திரையிடப்பட்டது. பின்னர் அவற்றின் விஷுவல்களும் திரையிடப்பட்டன. PRO நிகில் முருகன் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்திருந்தார், பாடகி சின்மயி தொகுத்து வழங்கினார். 2011 தமிழ்சினிமா வெற்றிப்பட்டியலில் இடம் பிடிப்பதற்கான முழுத்தகுதிகளோடு விரைவில் திரையரங்குகளில் “வெப்பம்”.
-K.விஜய் ஆனந்த்