இன்றைய சூழலில் சினிமாத்துறைக்கென்று ஏதேனும் சாதனை புரிந்தவர்கள் என்று பட்டியலிட்டால் முதல் இரண்டு இடங்களைப்பிடிப்பது சினிமா தியேட்டர் நடத்துபவர்களும் 100 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகனும்தான்.
அந்த வகையில் சென்னை நங்க நல்லூரில் வெற்றிவேல் தியேட்டர் நடத்தி வருபவரும் முன்னாள் எம்.எல்.ஏ வுமான கண்டோன்மெண்ட் சண்முகம் தயாரித்திருக்கும் படம் வில்லாளன் வரும் டிசம்பர் 31 அன்று திரைக்கு வருகிறது.
இயக்குனர்கள் வெற்றி மற்றும் சூரியன் திரைக்கதையினை எழுதி முடித்த கையோடு பல ஹீரோக்களிடம் கதையும் சொல்லியிருக்கிறார்கள். திடீரென்று சூரியனின் பார்வை வெற்றியின் மீது சில விநாடிகள் ஆழப்பதிய வெற்றியே கதா நாயகன் என்று நடிப்பது என்பதும் முடிவு செய்யப்பட்டது. எத்தனை ஹீரோக்களின் படங்களைத் தங்களது தியேட்டரில் திரையிட்டு அவர்களை ஸ்டார் ஆக்கியிருப்பார் வெற்றி இன்று அவரே ஹீரோவாக..ஆம் தயாரிப்பாளர் சண்முகம் அவர்களின் புதல்வர் தான் இந்த வெற்றி.
புதுமுகம் அஸ்விதாவோடு காதலையும் ஆக்ஷனையும் சரியாகக் கலந்து வில்லாளனை உருவாக்கியிருக்கிறார்கள். தியேட்டரில் படங்கள் ஓடும் போது உடன் இருந்து பார்த்து ரசிகர்களின் ரசனையை நன்கு தெரிந்து வைத்திருப்பதால் இந்தப் பட்த்திற்கான திரைக்கதையினை மிகவும் சரியாக அமைத்து படமாக்கியிருக்கிறார்கள்.
ரவிராகுலின் இசை ஏற்கனவே நல்ல பெயர் வாங்கிக் கொடுத்து விட்டது. அவரது இசையில் அமைந்த பாடல்களை நன்றாகப் படமாக்கியும் இருக்கிறார்கள். கேமரா சார்லஸ் ஆண்டனி,சண்டைப்பயிற்சி பவர் பாண்டியன், இணைத்தயாரிப்பு ஜெய்ஷம்பத். மக்கள்தொடர்பு மூத்த பத்திரிக்கையாளர் பாலன்.
இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏ.வி.எம் ஏசி தியேட்டரில் நடந்த்து. வாழ்த்துவதற்கு முந்த வேண்டும் என்று சொல்வார்கள் மூத்த பத்திரிக்கையாளர் ராம்ஜி, PRO சங்கத் தலைவர் விஜயமுரளி,செயலாளர் பெருதுளசி பழனிவேல் வில்லாளன் அணியை வாழ்த்திப் பேசினார்கள்.
-K.விஜய் ஆனந்த்