அயனின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் இயக்குனர் K.V.ஆன்ந்த் இயக்கும் படம் கோ. ஜீவா மற்றும் ராதாவின் மகள் கார்த்திகா நடிக்கும் கோ படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பாடல் பதிவுகள் முடிந்த நிலையில் பாடல்களைக் கேட்ட சோனி நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் ஹாரிஸ் ஜெயராஜ் ஐயும் இயக்குனர் K.V ஆனந்தையும் வெகுவாகப்பாராட்டியிருக்கிறார். இந்தப் படத்தின் ஆடியோ உரிமை அதிக விலைக்கு விற்கப்பட்டு சாதனை ஏற்படுத்தியுள்ளது. வரும் 2011 ஆம் ஆண்டு பொங்கல் நன்னாளில் இசை வெளியீடு நட்த்த திட்டமிட்டிருக்கிறார்கள்.