கதாநாயகன் கதாநாயகி உட்பட 71 புதுமுகங்கள் அவர்களுக்கு 372 நாட்கள் நடிப்புப் பயிற்சி - அதன் பின் ஒத்திகை என தமிழ் சினிமா வரலாற்றில் மிகவும் புதுமையாக வளர்ந்து வரும் படம் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி.
தாஜ் நூர் இசயில் உருவான இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை,பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. ஆயிரம்முத்தங்களுடன் தேன்மொழி படத்தின் இயக்குனர் ஷண்முகராஜா வின் குருநாதர் இயக்குனர் சேரன் மற்றும் இயக்குனர் அமீர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட புன்னகை அரசி சினேகா பெற்றுக் கொண்டார்.
விழாவில் பேசிய இயக்குனர் சேரன், ஷண்முகராஜாவின் இந்த அரிய முயற்சியினை வெகுவாகச் சிலாகத்துக்கூறினார். மட்டுமல்லாமல் படத்தினை ஒவ்வொரு காலகட்டத்திலும் பார்த்து வியந்த சேரன் இந்தப் படத்தினை வெளியிடுவதற்கும் தம்மால் ஆன பங்களிப்பினை வழங்கியிருக்கிறார். சேரன் தான் நாடோடிகள் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனிடம் இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார். படம் பார்த்து வியந்து போன மைக்கேல் ராயப்பன் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழியினை வெளியிடுகிறார்.
தம்மிடம் பலவருடங்களுக்கு முன்பே இந்தக் கதையுடன் ஷண்முகராஜா வந்ததை நினைவுகூர்ந்த இயக்குனர் அமீர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி படத்தின் பாடல்காட்சிகளையும் டிரையலரையும் பார்த்து விட்டு இந்தப்படம் தன்னிடம் இருந்து நழுவிப்போனதில் தாம் இன்று வருந்துவதாகக் கூறினார். ஒரு அறிமுக இயக்கனராக இயக்குனர் ஷண்முகராஜா கொடுத்த இந்தமாதிரி ஒரு பயிற்சியினை ஏற்கனவே வெற்றி பெற்றிருக்கும் தம்மைப் போன்ற இயக்குனர்களால் ஏன் கொடுக்க முடியவில்லை..? என்று தனது ஆதங்கத்தை முன் வைத்தார்.
மென்பொருள் வல்லுனராகப் பணியாற்றிக் கொண்டிருந்த வெங்கடேஷ் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அக்ஷரா ஆகியோர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி படத்தில் கதா நாயகன் கதா நாயகிகளாக அறிமுகமாகின்றனர்.
படத்தில்மிகவும் புதுமையான முறையில் நடிகர்களின் முகத்தைக்காட்டாமல் படம்பிடிக்கப்பட்டிருக்கும், திருவள்ளுவரின் காமத்துப் பாலில் இருந்து எடுக்கப்பட்ட குறள்கள் அடங்கிய ஒரு பாடல் நிச்சம் இளைஞர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்றால் மிகையாது.
Enjoy the photo gallery of the movie at http://www.mysixer.com/?p=15593
Enjoy the audio launch gallery of this movie at http://www.mysixer.com/?p=16165
ஒரு வருட பயிற்சி கொடுக்கப்பட்டிருந்ததால் படத்தில் வரும் 62 காட்சிகளும் ஒரே டேக்கில் படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக படத்தில் வரும் மிகவும் முக்கியமான காட்சியான கிளைமாக்ஸ் காட்சியில் கதா நாயகன் வெங்கடேஷும் கதா நாயகி அக்ஷ்ராவும் 8 நிமிடங்களுக்கு தங்களது முழுத்திறமையையும் வெளிப்படுத்தி நடித்திருக்கின்றனர். இதைப்பற்றிப் பேசிய சேரன், “ கதாநாயகிக்குத் தமிழ் தாய்மொழியாக இருந்ததால் படத்தில் வரும் வசனத்தை நன்கு புரிந்து கொண்டு இயக்குனர் எதிர்பார்த்த அசாத்தியமான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்” என்றார்.
இசையமைப்பாளர் தாஜ் நூர் ஒத்துக்கொண்ட முதல்படம் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழிதான் என்பது குறிப்பிடத்தக்கது. அற்புதமானபாடல்களை மட்டுமல்லாமல் ஒன்றரை மாதங்கள் உழைத்து மிகவும் நேர்த்தியாகப் பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்.
படத்தைப் பற்றிப்பேசிய இயக்குனர் ஷ்ண்முகராஜா, “ வெறுமனே காதல்- அதனைத்தொடர்ந்து மோதல் என்று காதலை வழக்கமாகச் சொன்ன பாணியிலிருந்து முற்றிலும் விலகி காதலின் உண்மையான சில பகுதிகளைக் காட்டியிருக்கிறோம்... ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி பார்ப்பவர்களுக்கு தங்கள்காதல் எப்பொழுது வரும், தங்கள் காதலர்கள் எப்படி இருக்க வேண்டும்/இருப்பார்கள், எப்பொழுது அவர்களைக் கட்டிப்பிடிக்க வேண்டும், முத்தமிட வேண்டும், காதலில் ஏற்படும் மோதல்களை /தடைகளை எப்படி சமாளித்து வெற்றி பெற வேண்டும் என்பன நன்றாகத் தெரிந்து விடும்” என்று கூறினார்.
காதல் என்றுமே தேவையானது என்றால் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழியும் தேவையான படமே, அது பாடமாக இருப்பது கூடுதல் சிறப்பு. ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி- யைப் பார்க்கத் தயாராகுங்கள்.
விஜய் ஆனந்த்.K