மன்மதன் அம்பு திரைப்படத்தில் கமல்ஹாசன் எழுதி பாடியும் உள்ள "கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்..' என்று தொடங்கும் பாடலுக்கு இந்து கடவுள்களை அவமதிப்பதாக்க்கூறி இந்து மதத்தினரிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
எந்த வித தணிக்கையுமின்றி தணிக்கைக்குழு வினர் அந்தப் பாடலை அனுமதித்த நிலையிலும் மன் மதன் அம்பு பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பாடப்பட்ட இந்தப்பாடல் விஜய் டிவி யில் 3 முறை ஒளிபரப்பு செய்யப்பட்டு ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பினைப் பெற்ற போதிலும் மன்மதன் அம்பு தன் நிறுவனத்தயாரிப்பில் அல்லாமல் ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதய நிதி ஸ்டாலினின் தயாரிப்பாததால் அனைத்து தரப்பு ரசிகர்களும், எம்மத்த்தவர்களும் தியேட்டருக்கு வந்து திரைப்படத்தை ரசிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக ஏற்கனவே பல கோடி பேர் பார்த்து ரசித்த பாடலாக இருந்த போதிலும் இப்பாடல் காட்சியை தாங்களே முன் வந்து நீக்குவதாக்க் கமல்ஹாசன் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குடும்பத்திலேயே வைணவரும்,சைவரும்,இஸ்லாமியரும் , கிருத்துவர்களும் இருப்பவதாகவும் அவர்கள் தன்னைப்போல் அன்றி தெய்வ பக்தி மிக்கவர்கள் இருந்தபோதிலும் தான் இப்பொழுதும் எப்பழுதும் பகுத்தறிவுவாதியாக இருக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய தயாரிப்பில் வெளிவரும் படமாக இருந்தால் யார் மனதையும் புண்படுத்தும் பாடல் அல்ல என்று தணிக்கையில் தனியாக ஒரு சான்றிதழ் பெற்று திரையிடப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்த கமல்ஹாசன் மன் மதன் அம்பு வியாபாரம் மற்றவர் செய்யும் வியாபாரம் இதில் தனது பங்கு ஒரு கலை ஊழியனாக மட்டுமே என்றும் அரசியல்வாதிகளின் இடையூறுகள் தனக்குப்புதிதல்ல, மதமும் அரசியலும் கலந்த இந்த சிக்கலில் நல் ரசனை பலியாகாதிருக்கவும் மன் மதன் அம்பு திரைப்படத்தினை அனைவரும் கண்டு ரசிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தனது பகுத்தறிவுப் பயணம் மக்களின் அன்புடன் தொடரும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.