இயக்குனர் வெங்கட்பிரபு தனது சிஷ்யன் பா ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படம் பார்த்து விட்டு தனது சிஷ்யனை கட்டிப்பிடித்துச் சொன்ன வார்த்தை, “I really proud of u.. “ தனது குருவின் வார்த்தைகளால் திக்குமுக்காடிப்போயிருக்கிறார் அறிமுக இயக்குனர் பா ரஞ்சித். சென்னையைக் கதைக்களமாகக் கொண்டு வந்த படங்களில் மபெரும் வெற்றிப்படமான பொல்லாதவனை இயக்கிய வெற்றிமாறனும் நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல படம் பார்த்த மகிழ்ச்சியில் திளைப்பதாகக் கூறியிருக்கிறார்.
அட்டக்கத்தியும் முழுக்க முழுக்க சென்னையைக் கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்டக்கத்தி படத்தினைப் பார்த்து வியந்து போன ஸ்டியோ கிரீன் நிறுவனம் அட்டக்கத்தியை உலகம் முழுவதும் வெளியிடும் மும்முர வேலைகளில் களமிறங்கியிருக்கிறது.
