தமிழ் சினிமாவில் எதை செய்தாலும் புதிதாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செயல்படும் இயக்குனர்களில் இசாக் க்கும் ஒருவர்.
2 மணி நேரம் 3 நிமிடம் 30 விநாடிகள் SINGLE SHOT -ல் ‘ அகடம்’ என்ற திரைப்படத்தை எடுத்து “கின்னஸ் உலக சாதனை” படைத்த இயக்குனர் “இசாக்” கடைசியாக பிக் பாஸ் புகழ் “ஆரி அர்ஜுனை” வைத்து ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார், அதை தொடர்ந்து மீண்டும் புதிய முயற்சியாக 12 மணி நேரத்தில் திரைக்கதை ஒன்றை எழுதி புதிய முகங்களை வைத்து இயக்கியும் இருக்கிறார்.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You
181 இது முழுக்க முழுக்க திகில் படம் என்றாலும், சமீபத்தில் தமிழக மக்களின் மனதை உளுக்கிய உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இத்திரைக்கதையை எழுதி 181 படத்தை எடுத்திருக்கின்றோம் என்றார்.
மேலும் இத்திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் இசாக் கூறுகையில் பல தடைகளைத் தாண்டி இப்படம் படமாக்கப்பட்டது எனவும் சென்சார் சான்றிதழுக்காக 3 மாத போராடி பிறகு மேல் முறையிட்டில் A சான்றிதழ் கிடைத்ததாகவும் படத்தை பார்த்த மேல் முறையிட்டு தலைவர் நடிகை கெளதமி பாராட்டியாதாகும் இத்தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்தார் மேலும் டிசம்பர் 16ம் தேதி அன்று திரைக்கு வந்திருக்கும் 181 திரைப்படத்திற்கு மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்றும் இயக்குனர் தெரிவித்தார்.
இத்திரைப்படத்தை சாய்ராஜ் ஃபிலிம் ஒர்க்ஸ் சார்பாக பி. பி. எஸ். ஈச குகா தயாரிக்க புதுமுகங்கள் ஜெமினி, ரீனா கிருஷ்ணன், விஜய் சந்துரு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இலங்கையின் “தேசிய விருது” பெற்ற இசை அமைப்பாளர் ஷமீல்.ஜே இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவு- பிரசாத், படத்தொகுப்பு S. -தேவராஜ், கலை -மணிமொழியான் ராமதுரை, சண்டை பயிற்சி –கோட்டி.