40 க்கும் மேற்பட்ட வருடங்களாக எண் கணித ஜோதிடத்தில் அனுபவம் வாய்ந்தவரும், மஹா ஸ்ரீ நியூமராலஜி, எண்களே உலகம் உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவரும், பார்மெட் நியூமராலஜி மாத இதழ் ஆசிரியருமான டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா, இறைவன் சிவனைப்பற்றி எழுதிய உலக கடவுளுக்கு வணக்கம் .. பாடல் திருக்கார்த்திகை தீபத்திரு நாளான இன்று வெளியானது.
ஜெய் கே வின் அற்புதமான இசையில் மதுபாலகிருஷ்ணன் பாடிய இந்தப்பாடல் ஆல்பத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மகேஷ் கே தேவ்.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You
டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா, திண்டிவனம் அருகே உள்ள அவரது சொந்த கிராமமான கூச்சிக்குளத்தூரில் பிரமாண்டமாக கட்டியிருக்கும் ஸ்ரீ ஸ்ரீ மஹா சிவலிங்கேஸ்வரரை துதிப்பது போல் அமைந்த இந்தப்பாடல் உலகம் முழுவதும் உள்ள சிவ பக்தர்களின் செவிகளுக்கு விருந்தாகும் வண்ணம் இன்று வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப்பாடலை கேட்க இந்த லிங்க்கில் செல்லவும்