இசையுலகில் தன்னிகரற்றுத் திகழும் சரிகம, அதன் அசல் சுயாதீன பாடலான 'உச்சிமலை காத்தவராயன்..' எனும் பாடலின் காணொளியை வெளியிட்டிருக்கிறது.
இசையமைப்பாளர் ஆனிவி இசையில் தயாராகி இருக்கும் சுயாதீன பாடல் 'உச்சிமலை காத்தவராயன்'. இந்த பாடலை இசையமைப்பாளரான ஆனிவி எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான ஜெஸ்ஸி கிப்ட்டுடன் இணைந்து ஆனிவி பாடியிருக்கிறார். ''பின்னால வந்த எவனும் வெளங்குனதில்ல..' என தொடங்கும் இந்த பாடலில் நடிகர்கள் மா. கா. பா. ஆனந்த், ஆர். ஜே. விஜய், நடிகை ஆஷ்னா ஜாவேரி ஆகியோர் நடனமாடி இருக்கிறார்கள். இந்த பாடலை டோங்கிலி ஜம்போ இயக்கியிருக்கிறார், இந்தப் பாடலுக்கான நடனத்தை நடன இயக்குநர் சாண்டி அமைக்க, மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You
'உச்சிமலை காத்தவராயன்' எனும் சுயாதீன பாடலை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்த, இந்தக் குழு, வெகுஜன மக்களிடத்தில் ஏகோபித்த ஆதரவுடன் இன்றும் வலம் வரும் 'பட்டிமன்றம்' எனும் விசயத்தை கையிலெடுத்து விளம்பரப்படுத்தியது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், இந்தப் பாடலின் காணொளி இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
பாடலில் மா.கா.பா ஆனந்த், ஆர். ஜே. விஜய், ஆஷ்னா ஜாவேரி மூவரின் தோற்றமும், நடனமும், பாடலும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது.