தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமை மிகு இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து, வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் அசத்தி வரும் அசோக் செல்வன் தனெக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். மேலும் விநியோக தளங்களில் அவரது படங்களுக்கு தனித்த மதிப்பு இருக்கிறது. ஓ மை கடவுளே, மன்மத லீலை என வெற்றிப்படங்களை தொடர்ந்து அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தனது வெற்றிக்கு உடனிருந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தார்.
இச்சந்திப்பில் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, நான் சினிமா பின்புலம் இல்லாமல் திரைத்துறைக்கு வந்தவன். என்னுடைய பின்புலமாக இன்று நான் நினைப்பது பத்திரிகையாளர்களையும் ரசிகர்களையும் தான். நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். சினிமாவுக்கு வரும் எல்லோருமே கஷ்டப்பட்டு தான் வருகிறார்கள் .அதை சொல்லிக்காட்ட விரும்பவில்லை. ஆனால் எனக்கு நீங்கள் தந்த ஆதரவும் அன்பும் மிகப்பெரியது. உங்களது விமர்சனங்களும் கருத்துக்களும் தான் என்னை செதுக்கியது. என்னுடைய குரு நீங்கள் தான். உங்கள் கருத்துக்களின் படிதான் என் ஒவ்வொரு படத்தையும் தீர்மானிக்கிறேன். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்படியான படம் செய்ய வேண்டும் .அதுவே என் விருப்பம்.
ஒவ்வொரு படமும் மாறுபட்ட களங்களில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அப்படித்தான் என் படங்களை தேர்ந்தெடுக்கிறேன். நித்தம் ஒரு வானம் படமே மூன்று பாத்திரங்கள் என்று நினைத்து தான் செய்தேன். இப்போது அதற்கு வரும் பாராட்டுக்கள் மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தை தந்துள்ளது. அடுத்தடுத்து மாறுபட்ட களங்களில் நிறைய படங்கள் செய்யவுள்ளேன்.
கிராமத்து கதையில் நடிக்க வேண்டுமென எனக்கும் ஆசை இருக்கிறது. இப்போது ஒரு படத்தில் பேசி வருகிறோம் விரைவில் கிராமத்து கதையில் என்னை பார்க்கலாம்.
அடுத்ததாக சரத்குமார் சாருடன் இணைந்து ஒரு திரில்லர் படத்தில் நடித்துள்ளேன். மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். அது பற்றிய தகவல்கள் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும். எனக்கு எப்போதும் போல் உங்கள் ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன்..” என்றார்.
நித்தம் ஒரு வானம் படத்தில் கொங்கு தமிழ் பேசி நடித்த அசோக் செல்வனை அவரது அம்மா மிகவும் உச்சிமுகந்திருக்கிறார்கள். “ எனக்கு சொந்த ஊர் கோவை என்றாலும், வளர்ந்த்தெல்லாம் சென்னைதான். மெட்ராஸ் தமிழ் எனக்கு சரளமாக வரும். இந்தப்பட்த்தில் கொங்கு தமிழ் பேசி எப்படி நடிக்கப்போற பார்க்கலாம் என்றார்கள் என் அம்மா… படம் பார்த்தவுடன் மிகவும் பாராட்டினார்கள்..” என்றார் அசோக் செல்வன்.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You
பொதுவாக படங்கள் வெற்றிபெற்றால் பெரிய ஊடகங்களின் பெயர்கள் தாங்கிய பேனர் வைப்பார்கள். ஆனால், நித்தம் ஒரு வானம் பட வெற்றி சந்திப்பில், அப்படத்தின் பி ஆர் ஓ யுவராஜின் ஆலோசனையின் பேரில் சினிமா பத்திரிகையாளர்கள் பணிபுரியும் & நடத்தும் அனைத்து ஊடகங்களின் பெயர்களையும் பேனரில் இடம்பெறச்செய்தது பத்திரிகையாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியாக இருந்தது.