அ.இ.அ.தி.மு.க தலைவர் ஜெ.ஜெயலலிதாவை தாம் சந்தித்தது மரியாதை நிமித்தமாகத் தான் என்று இயக்குனர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக விஜய் தனிக்கட்சி தொடங்கவோ அல்லது வேறு ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்தோ வ்ரும் சட்டமன்றத் தேர்ததலில் களமிறங்க தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதோ விஜய் , ஜெயலலிதாவைப் பார்க்க வருகிறார் என்று பத்திரிக்கையாளர்களும் அடிக்கடி போயஸ் தோட்டத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நேரத்தில் இயக்குனர் சந்திரசேகர் ஜெயலலிதாவைச் சந்தித்தது விஜயின் அரசியல் பிரவேச அறிவிப்பு வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தியது. ஆனால் சந்திரசேகர் அதனை மறுத்திருக்கிறார். திரைப்படம் ஒரு சிறந்த சக்தி வாய்ந்த ஊடகம் ஆகவே நடித்துக் கொண்டே விஜய் சமுதாய சீர்திருத்த நடவடிக்கையில் ஈடுபடுவார் என்றும் இன்னும் 20 படங்கள் நடிக்கவும் திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார். தான் என்றுமே இரு தி.மு.க அனுதாபிதான் என்றும் ஆனால் இதுவரையில் ஒரு தடவை கூட மு.கருணா நிதியை தி.மு.க தலைவர் என்கிற முறையில் தான் சந்தித்தது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.