
- File photo
எடிசன் விருதளிப்பு விழா வரும் பிப்ரவரி மாதம் 12ம் தேதி ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக திரைத்துறையினருக்காக ஏற்படுத்தப்பட்ட எடிசன் விருது வழங்கி வருவது அனைவருக்கும் தெரிந்தது. 2011ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை தமிழில் வெளிவந்த திரைப்படங்களில் உள்ள நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என அனைத்து துறையினருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவ்விருதை தேர்ந்தெடுக்க உலக தமிழர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த அகப்பக்கத்தின் முகவரி www.edisonawards.in என்ற இணையதளத்தின் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்களின் yahoo group, facebook மூலமும், ஒரு கோடி இமெயில் நியுஸ் லெட்டர் மூலமும் அனுப்பப்பட்டு ஆன்லைன் vote பெறப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள இணையதளம் பயன்படுத்தாத பொதுமக்கள் வாக்களிக்கும் விதமாக 110 மையங்களில் வாக்கு சீட்டு முறைப்படி ஜனவரி 2ம் தேதி முதல் ஜனவரி 30ம் தேதி வரை வாக்களிக்கவும், கல்லூரி, ஷாப்பிங் மால், பீச் போன்ற இடங்களிலும் வாக்களிக்க ஏதுவாக செய்யப்பட்டுள்ளது. இந்த எடிசன் விருது வழங்கும் விழா 7 நாட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும். மேலும் மலேசியாவில் astro தொலைக்காட்சியின் ஏற்பாட்டின் கீழ் மலேசிய நடன கலைஞர்கள், பாடகர்கள், சிங்கப்பூர் வசந்தம் டிவி நடன கலைஞர்கள், பாடகர்கள், காமெடி நடிகர்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சியில் 250 வெளிநாட்டு அமைச்சர்கள், பத்திரிக்கையாளர்கள், பார்வையாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.