’ஒஸ்தி’ வெற்றிப்படத்தைத் தொடர்ந்து பாலாஜி ரியல் மீடியா பிரைவேட் லிட்,' நிறுவனம் ‘தீராத விளையாட்டு பிள்ளை' படத்தினை இயக்கிய திரு இயக்கத்தில் சமரன் என்ற பெயரில் ஒரு படத்தினை மிகப்பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது.
'சமரன்' என்பதற்கு 'போர்வீரன்' என்ற பொருளும் உள்ளது. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க முதன்முறையாக அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் திரிஷா. இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். தீராத விளையாட்டுப் பிள்ளை படத்திற்கு பின் திரு-விஷால் இணையும் இரண்டாவது படம் இது.
ஒரு சராசாரி மனிதனின் நடைமுறை வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் நடக்கின்றன. அதனால் அவனுக்கு ஏற்படும் விளைவுகளை அவன் எதிர்கொண்டு கையாளும் முறையை சுவாரஸ்யமான சம்பவங்களாக கோர்வையாக்கி அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வண்ணம் ஆக்ஷன்-திரில்லராக உருவாகிறது இப்படம். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சாலக்குடியில் 15 நாட்கள் மிக பிரம்மாண்டமான முறையில் சண்டைக்காட்சிகளுடன் நடைபெற்றது.
அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 20-ந்தேதி முதல் தாய்லாந்தில் 50 நாட்கள் தொடர்ந்து பிரம்மாண்டமான முறையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
ACTION நிறைந்த சமரனின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை ஐரோப்பாவின் புகழ்மிக்க இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.
ACTION-னும் THRILLER-ரும் கலந்த சமரன் வரும் 2012-ம் ஆண்டு கோடையில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், 'கோ' 'அங்காடித் தெரு' படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.ராமகிருஷ்ணன் வசனம் எழுதுகிறார்.
பாடல்களை நா.முத்துக்குமார் எழுத சண்டைக்காட்சிகளை மிகப்பிரமாண்டமான முறையில் அமைத்திருக்கிறார் ராஜசேகர்.
எடிட்டிங் ரூபன் ஆண்டனி, தயாரிப்பு மேற்பார்வை பி.என்.சுவாமி நாதன் மற்றும் நிகில் இந்தப் படத்தின் மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றுகிறார்.