-K.Vijay Anandh
கூரத்தாழ்வார், இன்றிலிருந்து தொள்ளாயிரம் முதல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிறந்த விஷ்ணு பக்தர். காஞ்சிபுரம் அருகே உள்ள திருக்கூரம் எனும் கிராமத்தில் பிறந்து தன்னை விட 8 வயது சிறிய ராமானுஜரை குருவாக ஏற்றுக்கொண்டவர். மிகப்பெரிய செல்வந்தராகவும் ஞானவானாகவும் வாழ்ந்த கூரத்தாழ்வார், தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் இடுவதையே வழக்கமாக கொண்டவர். கூரத்தாழ்வாரின் குருவான ராமானுஜரின் ஆயிரம் ஆண்டை முன்னிட்டு சமீபத்தில் ஹைதராபாத்தில் ஆயிரம் அடி உயரத்தில் அமைக்கப்பட்ட ராமானுஜர் திருவுருவை பாரதப்பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் பக்தர்களுக்கு அர்ப்பணித்து வைத்ததை அனைவரும் அறிவோம்.
ஆயிரம் ஆண்டுகள் கழித்து ஸ்ரீராமானுஜருக்கு ஒரு பிரமாண்ட ஆலயம் அமைக்கப்பட்டது போல, அவரது சீடரான கூரத்தாழ்வாருக்கும் ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவரது பிறந்த ஊரான திருக்கூரம் அருகிலேயே, ஆண்டாள், லட்சுமிதாயார் உடனுறை ஸ்ரீமன் லட்சுமி நாராயணன் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு, அந்த ஆலயத்திலேயே ஸ்ரீராமானுஜருக்கும் கூரத்தாழ்வாருக்கும் தனித்தனியாக சந்நிதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
தமிழக பாஜக கட்சியின் OBC அணியின் மா நில துணைத்தலவர் ரங்கசாமி, தனக்கு சொந்தமான நிலத்தை இந்த புண்ணிய கைங்கார்யத்துக்கு வழங்க, மிகச்சிறப்பான முறையில் ஆலயத்தை கட்டிக்கொடுத்திருக்கிறார் திரைப்பட தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தர் சந்திரசேகரன்.
இந்த இடத்தில் கூரத்தாழ்வார் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை நினைவுபடுத்த வேண்டும். அனுதினமும், பெருமாளை சேவிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வந்த கூரத்தாழ்வார், ஒரு நாள் தானே வாழை இலையை அரிந்துவரச்செல்ல, வாழை இலை அரிந்த இடத்தில் இருந்து திரவம் சுரப்பதை கண்டு, மனிதர்களைப்போலவே அனைத்தும் உயிரினம் தானே அவற்றை இனிமேல் துன்புறுத்தலாகாது என்று முடிவு செய்து, அது முதல் பக்தர்களுக்கு தங்கத்தட்டில் உணவு பரிமாறியிருக்கிறார்.
அதையொத்த நிகழ்வாக , லக்ஷயா கல்வி குழும நிறுவனர் டாக்டர் எம் ரஞ்ஜனி, இந்த ஆலயத்திருப்பணிக்காக சிறு தொகை ஒன்றை நன்கொடையாக பெறவந்த நிலையில், தேவையான ஒட்டுமொத்த தொகையையும் தானே ஏற்றுக்கொண்டு ஆலயத்திருப்பணிகளை மேற்கொண்டிருக்கிறார் ரவீந்தர் சந்திரசேகரன்
ஆலயத்திருப்பணிகள் மிகச்சிறந்த ஸ்தபதிகளால் முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்த நிலையில், கூரத்தாழ்வாரின் பரம்பரையில் வந்த ஸ்ரீ வானமாமலை ராமானுஜர் ஜீயர் சுவாமிகளின் முன்னிலையில், திருப்பதி திருமலை தேவஸ்தான உறுப்பினர் எஸ் சங்கர் தலைமையிலான கும்பாபிஷேக குழு மிகச்சிறப்பான ஏற்பாடுகளை முன்ன்னெடுக்க, சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளாக கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான கிராமவாசிகளின் கோவிந்தா கோவிந்தா என்கிற முழுக்கம் விண்ணைப்பிளக்க, கடந்த மே 25, 2022 அன்று அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
Google Map
தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலபூஜை நடைபெறவுள்ளது, தங்களது குடும்பத்தாரின் பெயரில் நடத்தி ஸ்ரீமன் லட்சுமி நாராயணனின் அருளைப்பெற விழைபவர்கள் Sriman Lakshmi Narayanan Educational and Charitable Trust VG.Rangaswamy ஐ 9489991099 / 9551059599 இல் ஆகிய எண்களில் அணுகலாம். லட்சார்ச்சனை, யாககலச சங்கல்பம், திருவிளக்கு பூஜை ஆகியவற்றிற்கான கட்டணங்களையும் செலுத்தி ஸ்ரீமன் லட்சுமி நாராயணனின் அருளுடன் ஸ்ரீராமானுஜர், கூரத்தாழ்வார்களின் ஆசியையும் பெற்று நிறைவோடு வாழலாம்.
இந்த ஆலயத்தில், தமிழ்த்தாய்க்கும் தனி சந்நிதி அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.