சிபி சத்யராஜ் நடிப்பில் மே 13 இல் வெளிவர உள்ள திரைப்படம் ரங்கா.. அறிமுக இயக்குனர் வினோத்.DL இயக்கத்தில் ரங்கா படத்தில் சிபி சத்யராஜ் உடன் நிகிலா விமல் கதாநாயகியாக நடிக்க சதீஷ், ரேகா, மனோ பாலா மற்றும் ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மோனிஷ் வில்லனாக அறிமுகமாகிறார். அர்வி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்துள்ள ரங்கா படத்திற்கு ராம் ஜீவன் இசையமைத்துள்ளார்.
பாஸ் மூவிஸ் விஜய் கே செல்லய்யா தயாரிப்பில் உருவாகியிருக்கும் ரங்கா திரைப்படத்திற்கு தாமரை, விவேக், கார்த்திக் நேத்தா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
watch and enjoy the trailer of Ranga
படத்தை பற்றி குறிப்பிடும் போது இயக்குநர் வினோத், “ 20 நிமிடங்களுக்கு ஒரு முறை படத்தின் வகை மாறிக்கொண்டே இருக்கும். ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரம் என்பதை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது. நாயகனின் வலது கை அவர் சொல்லும் பேச்சை கேட்காமல் தனி ஆவர்த்தனம் செய்யும். ஆகவே சண்டைக்காட்சிகளில் மிகவும் கடினமாக உழைத்து மிகவும் வித்தியாசமான ஆக்ஷன் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள் சண்டை இயக்குநர்கள் திலீப் மற்றும் தினேஷ்.
முற்றிலும் மாறுபட்ட இருவேறு பிரதேசங்களில் படமாக்கவேண்டியிருந்ததால், காஷ்மீரின் பனிப்பொலிவில் படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்டுள்ளது. தேதி குறித்துவிட்டு படமாக்க சென்ற நிலையில், காஷ்மீரில் துளி பனி கூட இல்லை. இறைவன் அருளால் அடுத்த நாள் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன் நாங்கள் நினைத்தது போன்ற பனிப்பொழிவு இருந்தது.
படத்தில் மேடி என்கிற நாய் முக்கியகதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது…” என்றார்.
நாயகன் சிபி பேசும்போது, “ ஏற்கனவே படங்கள் தயாரித்திருப்பவர்களிடம் இந்தக்கதை சென்றிருந்தால் அவர்கள் அதனை முதலிலேயே மறுத்திருப்பார்கள். அந்தளவுக்கு சவாலான இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. என்னுடைய தயாரிப்பில் நான் நடிக்கும் படங்களுக்கு ஆவதை விட ரங்கா படத்திற்கு அதிக செலவு ஆகியிருக்கிறது…” என்றார்.
இசையமைப்பாளர் ராம்ஜீவனின் இசையில் அனைத்து பாடல்களும் மிகவும் அற்புதமாக வந்திருக்கின்றன.
இசைஞானியின் அற்புதமான இசையில் உருவான பாடல்களுடன் 80-90 களில் வெளிவந்து பெரிய வெற்றிபெற்ற முழுமையான ஆக்ஷன் படங்களின் அனுபவத்தை மீட்டெடுத்திருக்கிறார் வினோத் என்கிற எண்ணத்தை ரங்காவின் இசையும் டிரையலரும் விதைத்திருக்கின்றன என்ரால் அது மிகையல்ல.