2000-ம் ஆண்டு முதல் கடந்த 22 ஆண்டுகளாக வெப் ஹோஸ்டிங் துறையில் முன்னணி நிறுவனமான வி இந்தியா குழுமம், பாரத் ஜெனரிக் பார்மாசூட்டிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் மருந்தியல் துறையில் களம் இறங்கியுள்ளது. மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகளை வழங்குவதற்காக இந்நிறுவனம் உருவாக்கியிருக்கும் பாரத் ஜெனரிக் இணையதளம் மற்றும் செயலியை மூத்த தொழில்நுட்ப தொழிலதிபர், காக்னிசண்ட் முன்னாள் துணைத் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான லட்சுமி நாராயணன் அறிமுகப்படுத்தினார்.
பாரத் ஜெனரிக்கின் ஐஓஎஸ் செயலியை காஞ்சிபுரம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் தேவஸ்தான பரம்பரை மிராஸ்தார் ஸ்தானீகம் சி ஆர் நடராஜ சாஸ்திரி தொடங்கி வைத்தார்.
சென்னையில் இருந்து இயங்கும் பாரத் ஜெனரிக், மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் கவனம் செலுத்தி, சிப்லா, யுனிவெண்டிஸ், கோயே, வொக்ஹார்ட், லுபின், நால், எலிக்ஸிர், அல்கெம், சைடஸ், எல்டர், அபாட், ஸ்டெரிஸ் மற்றும் லீஃபார்ட் போன்ற முன்னணி ஜெனரிக் மருந்து பிராண்டுகளுடன் கைகோர்த்துள்ளது. அனைத்து ஜெனரிக் மருந்து நிறுவனங்களும் சர்வதேச சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளின் அங்கீகாரம் பெற்றவையாகும்.
யுனிவென்டிஸ் மெடிகேர் லிமிடெட், கோயே மற்றும் எலிக்சிர் ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் பாரத் ஜெனரிக் ஆகும். பாரத் ஜெனரிக்கின் நோக்கம் மக்களுக்கு மலிவு விலையில் உயர்தர மருந்துகளை வழங்குவதாகும்.
பாரத் ஜெனரிக் நிறுவனர் சி வெங்கட்ராமன் கூறுகையில், "மக்கள் மருந்துகளுக்கு குறைவாக செலவழிக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். எங்கள் தரவுகளின்படி 65%-க்கும் அதிகமான மக்கள் மருந்துகளின் விலை அதிகமாக இருப்பதால் தொடர்ந்து மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள முடியவில்லை. எனவே, குறைந்த விலையில் உயர்தர பிராண்டட் மருந்துகளை வழங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நான், எதிர்பாராத மருத்துவ செலவால் மக்கள் படும் சிரமங்களை அறிவேன். மருந்துகளின் விலை அதிகரித்து வருவதால், தரத்தில் சமரசம் செய்யாமல், குறைந்த விலையில் சிறந்த தீர்வை வழங்க நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம்,” என்றார்.
அடுத்த ஆறு மாதங்களில், இந்தியா முழுவதும் 50 விற்பனையங்களுக்கு சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது, குறிப்பாக 2 மற்றும் 3-ம் அடுக்கு நகரங்களை (திருச்சி, மதுரை, கொச்சி, திருப்பதி, சூரத், நாக்பூர், நிஜாமாபாத், கான்பூர் மற்றும் காரைக்கால் போன்றவை) சென்றடைய பணிகள் நடைபெற்று வருகின்றன என்கிற செய்தி சாமான்ய மக்களுக்கு அவர்களின் மருத்துவச்செலவுகளை பெருமளவில் குறைக்கும் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறது.
பாரத் ஜெனரிக் இணையதளம்
www.bharatgeneric.com