ஓங்காரம், மின்மினி, இட் அது பட் ஆனால் ஆகிய படங்களில் நாயகனாக நடித்துக்கொண்டிருப்பவர் ஸ்ரீ.
மணி தாமோதரன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் இன்னொரு படமான ஷாட்கட் , சமீபத்தில் நடந்த டொரண்டோ தமிழ்த்திரை விழாவில் விருதுகளை குவித்திருக்கிறது.
வாடகைகூட கொடுக்க இயலாமல் குடியிருக்கும் வீட்டை விட்டு துரத்தப்படும் நான்கு இளைஞர்கள் பணமழை கொட்டும் இடைத்தேர்தலை பயன்படுத்தி ஒரே நாளில் எப்படி கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் என்பதைச் சொல்லும் படமான ஷாட்கட் சிறந்த சமூகப்படத்திற்கான விருதையும் அப்படித்தில் நடித்திருக்கும் ஸ்ரீ சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றிருக்கிறார்கள்.