லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிப்பில் சாந்தனு, அதுல்யா ரவி ஆகி நடிப்பில் உருவான படம் முருங்கைக்காய் சிப்ஸ்.
இந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட யோகிபாபு, " 10 வருடங்களுக்கு முன்னால் நான் நடிக்க வாய்ப்பு கேட்டு அலைந்த நாட்களில், சாந்தனு நடித்த சித்து +2 படத்திலும் வாய்ப்பு கேட்டு போயிருந்தேன். என்னை பார்த்துவிட்டு அப்படத்தின் இயக்குநரும் சாந்தனுவின் தந்தையுமான கே.பாக்யராஜ் இவனுக்கு எப்படியாவது ஒரு வாய்ப்பு கொடுத்துவிடுவோம் என்று அவரால் முடிந்த ஒரு வாய்ப்பினை கொடுத்தார். வில்லனின் அடியாட்கள் நான்கு பேரில் ஒருவனாக ஓரமாக நிற்பேன். அது சாந்தனுக்கே தெரியுமா என்று தெரியவில்லை.
இன்று நான் பரபரப்பாக நடித்துக்கொண்டிருக்கிறேன் தான் ஆனாலும், சாந்தனு படத்தில் நடிக்க கேட்ட உடன் ஒத்துக்கொண்டேன். மிகப்பெரிய ஜாம்பவானின் மகன், நம்பிக்கையுடன் போராடிக்கொண்டிருக்கும் திறமையான இளம் நடிகர் அவருக்கு துணை நிற்பது என் கடமையாக நிற்கிறேன். சாந்தனு படங்களில் தொடர்ந்து நடிப்பேன்.." என்றார்.
யோகிபாபுவின் இந்த பேச்சு அரங்கில் கூடியிருந்தவர்களின் அமோக வரவேற்பை பெற்றது என்றால் அது மிகையல்ல.