பூவரசம் பீப்பி, சில்லு கருப்பட்டி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களை இயக்கிய ஹலீதா ஷமீமின் அடுத்த படைப்படாக ஏலே வெளியாகிறது.
புஷ்கர் – காயத்ரி இயக்கிய ஓரம்போ முதல் அவர்களிடம் உதவிய இயக்கு நராகப் பணியாற்றியவர் ஹலீதா. அப்படி உதவி இயக்கு நராகப் பணியாற்றியபோதே அதாவது 2009 லேயே அவர் சொன்ன ஏலே கதையால் கவரப்பட்டு அதனை மனதிலேயே வைத்திருந்து, தாங்கள் தயாரிப்பாளராக அடியெடுத்து வைக்கும் போது முதல் படைப்பாக இந்தப்படம் தான் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததுடன் தங்களது உதவி இயக்குநரின் கனவை நனவாக்கியிருக்கிறார்கள் புஷ்கர் – காயத்ரி.
ஐஸ் விற்கும் தந்தையாக சமுத்திரக்கனியும், அவரது மகனாக காலா புகழ் மணிகண்டனும் நடித்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு நடைபெற்ற மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்திலேயே பல மாதங்களாகத் தங்கி, அங்கிருக்கும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் 102 வயது முதியவர் வரை வசனங்கள் சொல்லிக் கொடுத்து படத்தில் நடிக்க தயார்ப்படுத்தியிருக்கிறார்கள் இயக்குநர் ஹலீதா ஷமீம் மற்றும் உதை இயக்குநர்கள்.
அவர்கள் தங்களுக்கு நடிப்பு மற்றும் கண்டியூனிட்டி சொல்லிக்கொடுக்கும் அளவிற்கு சிறப்பாகப் பங்காற்றினார்கள் என்று குறிப்பிட்டார் சமுத்திரக்கனி.
படத்தில் தனது கதாபாத்திரமான முத்துகுட்டி தோரணையில் சமுத்திரக்கனி ஐஸ் விற்பதாக, தைப்பூச திருநாளில் துவங்கப்பட்ட “ஏலே” படத்தின் விளம்பர பணிகள் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றி அடைந்ததில் சமுத்திரகனியும் ஏலே படக்குழுவினரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
முன்னதாக படத்தின் ட்ரெய்லரை வெளியிடும் பொருட்டு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது தந்தையுடனான உறவு குறித்து பேசிய சிறு வீடியோ ரசிகர்களிடம் நேர்மறையான பாராட்டுக்களை பெற்றுள்ளது. படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
காபெர் வாசுகி, அருள்தேவ் ஆகியோர் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படம், 12 பிப்ரவரி 2021 அன்று வெளியாகிறது. இத்திரைப்படத்தினை Y Not Studios நிறுவனமும் Reliance Entertainment நிறுவனமும் இணைந்து வழங்கும் ஏலேவில் இணை தயாரிப்பு செய்துள்ளார் சக்ரவர்த்தி ராமசந்திரா.