ஜிப்ஸி திரைப்படத்தை நடிகரும் ,மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமலஹாசன் -க்கும் கெளதம் வாசுதேவ மேனன் மற்றும் ஐசரி கே கணேஷ் ஆகியோருக்குத் திரையிட்டுக் காட்டியது ஜிப்ஸி குழு.
படத்தைப் பார்த்த கமல்ஹாசன், ''மதவெறி, சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் ஜிப்ஸி. படக்குழுவினர் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்..” என்று பாராட்டினார்.. இயக்குநர் ராஜுமுருகன், தயாரிப்பாளர் அம்பேத்குமார், நடிகர் ஜீவா, கதாநாயகி நடாஷா சிங் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.