தமிழரசன் படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா தனது வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு பணியை மேற்கொண்டார்.
பின்னணி இசையின் முன்னணி நாயகர் இன்று வரையிலும் இளையராஜா மட்டுமே என்றால் அது மிகையல்ல. ஏற்கனவே தமிழரசனின் பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், இது வரை இல்லாத நிகழ்வாக அத்தனை இசைக்கலைஞர்களையும் தனது வீட்டிற்கே வரவழைத்த இசைஞானி, அவர்களை வைத்து முழுப்படத்திற்குமான பின்னணி இசையை வீட்டில் வைத்தே அமைத்திருக்கிறார்.
ஒரு இசையமைப்பாளர் நாயகனாக நடிக்கும் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பது இதுவே முதல்முறை என்றால், வீட்டில் வைத்து முழுப்படத்திற்கும் பின்னணி இசை அமைத்திருப்பதும் சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது.
SNS மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரிப்பில் ,பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடித்துள்ள தமிழரசன், 2020-ஆம் ஆண்டின் மிகச்சிறந்த பின்னணி இசை மற்றும் பாடல்களைக் கொண்ட படமாக இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.