“The poet studios” தயாரிப்பில், வியாசர்பாடி கால்பந்து வீரராகக் கதிர் நடித்துள்ள திரைப்படம் “ஜடா”. இப்படத்தை அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக ரோஷினி பிரகாஷ் மற்றும் சுவாஸ்திகா ஆகியோரும் யோகிபாபு, லிங்கேஷ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். டிசம்பர் 6 ல் வெளியாகவுள்ள இப்படத்தின் இசையை புஷ்கர் – காயத்ரி இணைந்து வெளிடப்பட்டனர். நிகழ்வில் கதிரின் தந்தை லோகு கலந்துகொண்டார்.
விழாவில் பேசிய கதிர், ”பரியேறும் பெருமாள் மாதிரியான இன்னொரு களம், ஜடா.. புஷ்கர்-காயத்ரி யின் பசங்க எல்லாரும் சேர்ந்து படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அதுதான் ஜடா. இயக்கு நராக அறிமுகமாகும் குமரன், அற்புதமான படைப்பாளி என்பதையும் தாண்டி, துளியும் ஈகோ Ego இல்லாத டைரக்டர். அனைவரின் ஆலோசனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, சிறப்பாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக்கொள்வார்.
ஜடா படத்திற்காக இந்திய கால்பந்து அணிக்காக ஆடியிருக்கும் புழலைச் சேர்ந்த சாந்தா என்பவரிடம் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதும், வியாசர்பாடியைச் சேர்ந்த பல நிஜ கால்பந்தாட்ட வீரர்களுடன் விளையாடியதும் மறக்க முடியாத அனுபவம்.
வழக்கமான படமாக அல்லாமல், இந்தப்படத்தில் நிறைய களங்கள் இருக்கும், உணர்ச்சி கொந்தளிப்புகள் இருக்கும், அனைத்தையும் மிகவும் விரும்பி நடித்தேன்.
சர்வதேச கால்பந்துக்கும் தெருவில் விளையாடும் கால்பந்திற்கும் நிறைய வித்தியாச்சம் இருக்கிறது, இங்கே, விதிகளே கிடையாது. குறிப்பாக செவன் என்று ஒரு பந்தயம் இருக்கின்றது. பொருளாதார சூழ் நிலையில் பின் தங்கி இருக்கும் வீரர்கள் கால்பந்து விளையாட்டின் மீது இருக்கும் காதலால், தங்கள் உயிரைப் பணயம் வைத்து செவன் இல் பங்கேற்பார்கள். அதில் வென்றால், நிறைய பணம் கிடைக்கும் என்பது ஒரு புறம், கொஞ்சம் தவறினால், ஊனமும் ஏற்பட்டுவிடும். அப்புறம் வாழ்க்கை முழுவதும் கால்பந்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
இந்தியாவிலேயே இப்படிப்பட்ட ஒரு விஷயத்தைச் சொல்லும் படங்கள் வந்ததில்லை. செவன் பற்றிய முதல் படமாக ஜடா உருவாகியிருக்கிறது. நாங்கள் கொஞ்சமாக நடித்ததை, சாம் சி எஸ் இன் பின்னணி இசை பிரமாண்டமாக காட்டிவிட்டது..” என்றார்.
இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி பேசும் போது, “ விக்னேஷ், ஏதோ படம் தயாரிக்கலாம் என்று எண்ணாமல், மிகவும் புதிதான அழுத்தமான கதையைத் தேர்ந்தெடுத்து தயாரித்திருக்கிறார், அதிலேயே பாதி ஜெயித்தும் விட்டார். நேர்மறையான எண்ணங்கள் நிறைய இருக்கும் இந்தப்படத்தின் கதையை மூன்று மணி நேரம் சொன்னார் இயக்குநர் குமரன். படத்தின் இடையில் வரும் ஒரு திருப்புமுனை மிகவும் அருமையாக இருக்கும். ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கும் கதிர் இந்தப்படத்தில் நாயகனாக நடித்திருப்பது சிறப்பான அம்சம்…” என்றனர்.
விக்ரம் வேதாவின் எடிட்டர் ரிச்சர்ட் ஜடாவையும் எடிச் செய்திருக்கிறார். எந்தப்படங்களிலும் உதவி இயக்கு நராகப் பணியாற்றிய அனுபவம் இல்லாமல், காதல் ஆல்பம் இயக்கிய அனுபவத்துடன் கால்பந்து பற்றிய படம் இயக்கியிருக்கிறார் குமரன். இவரது தாயார், கோயில் பூக்கடையில் பூக்கட்டுபவர் என்பதும் மகனின் இயக்குநர் கனவிற்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.