இரும்பு சுகமா கையகட்டி உட்கார்ந்தா,
ஒடஞ்சி துரும்பா சில்லு சில்லா கொட்டும் பார் !
உழைப்ப மதிச்சு காலெடுத்து வெச்சாலே...
இளமை முழுசா உன் கூடவே ஒட்டும் பார்...!!
நேற்று வெளியான, சும்மா கிழி….சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படப்பாடலுக்குள் புதைந்துள்ள விலைமதிக்கமுடியாத வார்த்தைகள், தத்துவம் அல்லது அறிவுரை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
பாடலை எழுதிய விவேக், முழுக்க முழுக்க ரஜினிகாந்தின் இத்தனை ஆண்டுகால இளமை ரகசியத்தை இந்தப்பாடலுக்குள் கொண்டு வந்திருக்கிறார்.
லேட்டஸ்ட்டுனா என்ன..? மாடர்னா என்ன..? கம்யூட்டரைஸ்டுனா என்ன..? அட போங்கப்பா.. என்று, 80 கள் 90 களுக்குச் சென்று இசையமைத்திருக்கிறார் அனிருத்.
ரஜினிகாந்தின் பல படங்களில் அவர் அறிமுகமாகும் எத்தனையோ வெற்றிப் பாடல்களை எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியிருந்தாலும், மலேசியா வாசுதேவன் பாடிய, பொதுவாக எம்மனசுத்தங்கம்… என்றும் அசைக்க முடியாத பாடலாக இருந்தது என்றால் அது மிகையல்ல.
எஸ் பி பியும் ரஜினியின் பாடல் முகத்திற்கு. இன்னொரு கண் தான் என்றாலும், சும்மா கிழி… பாடலில் நெற்றிக்கண்ணாகச் சுட்டுத்தள்ளியிருக்கிறார்.
ரஜினியின் பல மாஸ் பாடல்களின் ராகத்தின் சாயல் இருந்தாலும், சும்மா கிழி…பாடல் வெளியான சில மணி நேரங்களில், இதுவரை 75 லட்சம் தடவைகள் கேட்கப்பட்டிருக்கிறது.
அனிருத்தின் ஸ்டுடியோவில் பாடலைக் கேட்ட ரஜினி, “ சூப்பர் தம்பி ஐயோ… தியேட்டரில் சும்மா கிழிதான்..” என்று மனம் திறந்துபாராட்டினார்.