நடிகை சந்தோஷி யின் பிளஷ் அழகுக்கலை நிலையம் நடத்திய ஒரு நாள் பயலிரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நமீதா, ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும்போது அந்தக்குடும்பத்துக்கு மட்டுமல்ல சமூகத்திற்கே மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும் விதமாக பிறக்கிறாள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘ராஜஸ்தான் மாநிலத்தில் பிப்லாந்திரி என்கிற ஒரு சாதாரண கிராமத்தில் பெண் குழந்தை பிறக்கும் ஒவ்வொரு முறையும் அதைக் கொண்டாடும் விதமாக 111 மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்க்கிறார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது இதுபோன்று முயற்சி.. இயற்கையை பாதுகாக்கும் முயற்சி மட்டுமல்ல.. மொத்த கிராமத்தின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் ஒரு விஷயமும் கூட. அந்தவகையில் ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும்போது உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும் விதமாக பிறக்கிறாள்..
பெண்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல.. பெண்கள் வாழப் பிறந்தவர்கள்.. வீராங்கனைகள்.. இதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.. என்னைப் பொருத்தவரை இந்த நிகழ்ச்சியில் நான் நிகழ்ச்சியின் பிரதான நபர் கிடையாது, நான் அழகு ராணி கிடையாது.. லட்சுமி அகர்வாலும் ரம்யாவும் தான் இதற்கு தகுதியானவர்கள்.. வரலாற்றில் இவர்கள்தான் ஜாம்பவான்கள் என போற்றப்படுவார்கள்.. அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது..
நான் இதற்கு முன்பு மிகப்பெரிய ஜாம்பவான்கள் வீற்றிருக்கும் மேடையில் இருந்திருக்கிறேன்.. ஆனால் அப்போதெல்லாம் இல்லாத அளவுக்கு இன்று தான் உண்மையிலேயே நான் பெருமையாக உணர்கிறேன்” என்று கூறினார்.