சிபிராஜ், நந்திதா, பூஜா குமார் நடிக்கும் “கபடாடரி”படத்தின் தொடக்கவிழாவில் மூத்த நடிகர் சிவகுமார் கலந்துகொண்டு சிறப்பித்தார். சிபிராஜ் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் படத்தின் நட்சத்திர நடிகர்கள் கலந்து கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பினை சிவகுமார் துவக்கி வைத்தார். திரைப்பட இயக்குநர் சசி, தியா மூவிஸ் தயாரிப்பாளர் பி. பிரதீப் (கொலைகரன் புகழ்), தயாரிப்பாளர் கமல் போரா, தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக் மற்றும் சிபிராஜின் ‘வால்டர்’ புகழ் இயக்குநர் அன்பு ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி (சத்யா, சைத்தான் புகழ்) இயக்கி, கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் லலிதா தனஞ்சயன் தயாரிக்கும் இப்படத்தில் சிபிராஜ், நந்திதா, விஸ்வரூபம் புகழ் பூஜா குமார் ஆகியோருடன் ஜெயபிரகாஷ், ஜே.சதீஷ்குமார் மற்றும் சில பிரபலங்களும் நடிக்கவுள்ளனர். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். சைமன் கே கிங் இசையமைக்கிறார்.
எம். ஹேமந்த் ராவின் கதைக்கு ஜான் மகேந்திரன் உடன் இணைந்து திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார் தயாரிப்பாளரும் வி நியோகஸ்தருமான டாக்டர்.ஜி. தனஞ்சயன்
ஒரே மூச்சில் படப்பிடிப்பினை முடித்து மார்ச் 2020 ல் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.