Sat Cinemas தயாரிப்பில், அறிமுக நாயகன் ரோஷன் , நாயகி ஹிரோஷினி , வெயில் பிரியங்கா, வேலராமமூர்த்தி , மதுசூதனன் , ஜின்னா, கானா பாடல்களில் கலக்கும் ‘கானா’ சுதாகர், மதுமிதா, இயக்குநர் சரவணன் சக்தி, இமான் அண்ணாச்சி, விஜய் டிவி கோதண்டம், ‘காதல்’ பட புகழ் சரவணன், சுலக்ஷனா ஆகியோர் நடித்துள்ள படம் உற்றான். உற்றார் உறவுகளை எல்லாம் திரை அரங்குகளுக்குள் அழைக்கும் வகையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் கல்லூரி/காதல்/கலாட்டா ஆகியவற்றை மையமாக வைத்து இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார், ஓ. ராஜா கஜினி .பத்திரிக்கையாளர் ரவி ஷங்கர் இந்தப்படத்தில் ஒரு முக்கியமான வேடமேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப்படத்திற்காக ரகுநந்தன் இசையில் , மோகன்ராஜ், அருண் பாரதி, கானா சுதாகர் மற்றும் ரோகேஷ் ஆகியோர் எழுதிய பாடல்களை ஆர்.வி.உதயகுமார், கலைப்புலி s தாணு , பாக்யராஜ் , R .K செல்வமணி , ரமேஷ் கண்ணா , K .ராஜன் , ஒளிப்பதிவாளர் சுகுமார் , நடிகர் ஆரி, நடிகர் ராஜேஷ் , E .ராமதாஸ் , சித்ரா லக்ஷ்மணன் , ,இயக்குனர் பேரரசு , கலைப்புலி சேகரன் , நடிகர் ஜெய்வந்த் , கவிஞர் பிறை சூடன் ஆகியோர் கலந்துகொண்டு வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பேரரசு, “ஆர்.வி.உதயகுமார் சொன்னது போல எதுக்குமே உருப்படாதவங்க சினிமாவுக்கு வரலாம். ஆனால் சினிமாவுக்கு வந்து உருப்படாமல் போய்விடக்கூடாது. கல்லூரி காதல் கதைகளைப் பார்த்தே அதிகநாள் ஆகிவிட்டது, உற்றான் அப்படியொரு படமாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப்படத்தில் ஹீரோவுக்கு பெயர் விஜய். ஆனால் பாட்டில் அல்டிமேட்னா தல அப்படின்னு ஒரு வரி வச்சிருக்கார். ஆக சரியா பேலன்ஸ் பண்ணி இருக்கிறார். அதனால் இயக்குநர் ராஜாகஜினி விவரமாகத் தான் இருக்கிறார். இந்த ஹீரோ ரோஷன் முழுக்க முழுக்க ஹீரோவுக்கு தகுதியானவர். இவரிடம் அல்லு அர்ஜுன் சாயல் இருக்கு. உற்றார் வேறு உறவினர் வேறு. உறவுகளுக்குச் சமமான ஆட்களை உற்றார் என்று சொல்வோம். மாமன் மச்சான் போன்றவர்கள் தான் உறவினர்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருமே உற்றார்கள்..” என்றார்.
18 படங்களுக்கு மேல் உதவி இயக்கு நராய் பணியாற்றிவிட்டு, தயாரிப்பாளர்கள் கிடைக்காத நிலையில் தானே தயாரிப்பாளராகவும் ஆகி படத்தை இயக்கியிருக்கிறார் ராஜா கஜினி. தனி மனிதனாய் தயாரித்து இயக்குவது சுலபமல்ல…” என்றார் தனஞ்செயன்.
ஒளிப்பதிவாளர் சுகுமாரின் உதவியாளர் ஹாலிக் பிரபு , உற்றானை ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பில்லா ஜெகன், சண்டைக்காட்சிகளை அமைக்க, எஸ்.பி