செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் படம் அமீரா. இவர்கள், நாயகர்கள் என்றாலும் படம் அமீரா என்கிற நாயகி தான் மையக்கதாபாத்திரம், அதில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா நடித்து வருகிறார். இவர் மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்மூட்டி, திலீப் ஆகியோருடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு , கூத்துப்பட்டறை ஜெயகுமார், வினோதினி மற்றும் பலர் இதில் நடிக்கும் இந்தப்படத்தை சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரா.சுப்ரமணியன் இயக்குகிறார்.
பல சர்வதேச விருதுகளைக் குவித்த டூலெட் படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்..
அமீரா என்றால் இளவரசி என அர்த்தம். இஸ்லாமியப் பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை இது என்பதால் அமீரா என பெயர் வைத்துள்ளனர்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
மலையாளத்தில் சிங்கிள் டேக் நடிகை எனப் பெயர் வாங்கியவர் அனுசித்திரா. அவர் தமிழைப் புரிந்துகொண்டு நடிக்க காலதாமதமாகும் என்பதால், 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், தமிழிலும் வசனங்களையும் உணர்வுகளையும் சரியாக உள் வாங்கி ஒரே டேக்கில் நடித்து நேரத்தை மிச்சப்படுத்தியாதால், முன்கூட்டியே படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று தயாரிப்பாளர் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இயக்குநர் சுப்ரமணியன் அணுசித்தாராவின் "கண்கள் நடிக்கும் நடிப்பிலேயே ஒரு படத்தை முடித்துவிடலாம்" என குறிப்பிடுகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தப்படத்தில் சீமான் மற்றும் ஆர்.கே.சுரேஷ் இருவரும் கிட்டத்தட்ட 20 நாட்கள் நடித்து தங்களது காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டனர்.
தென்காசி, சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வேகமாக வளர்ந்து வருகிறார், அமீரா.