Turinig Point Production R.தாமோதரன் தயாரித்திருக்கும் படம், பிழை. தரமான குறும்படங்களை இயக்கிய ராஜவேல் கிருஷ்ணா இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் சின்ன காக்கா முட்டை ரமேஷ், அப்பா படத்தில் நடித்த நசாத் மற்றும் கோகுல் ஆகிய சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அவர்களது அப்பாக்களாக ஜார்ஜ், சார்லி மற்றும் மைம்.கோபி, வினோத், அபிராமி, இளையா, மனிஷா ஜித் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் தாமோதரன், " பெரிய ஹீரோவை வைத்துப் படம் எடுத்தாலும் கதை இல்லாவிட்டால் வசூல் ஜீரோ தான். கதையை மட்டுமே நம்பி படம்.எடுக்கும் ஒவ்வொரு தயாரிப்பாளர்களும் ஹீரோதான். படப்பிடிப்பில் தினம் 100 பேருக்கு வேலை கொடுக்கிறோம். எல்லாம் முடிந்து பார்த்தால் தயாரிப்பாளர் தனியாகத்தான் நின்று கொண்டிருப்பார். சில நேரஙகளில் இயக்குநர் இருப்பார்.
அப்படி, பிரபலமில்லாத நடிகர்களை வைத்துப் படங்கள் எடுக்கும் போது அவற்றை வெளியிடமுடியாத நிலைதான் உள்ளது.
நான் கதையை ஹீரோவாக நம்பி படம் எடுத்திருக்கிறேன். எனது படத்தை ரசிகர்களிடம் கொண்டு செல்லும் பத்திரிக்கையாளர்களும் நல்ல படங்களைக் கைவிடாத ரசிகர்களும் தான் எனக்கு ஹீரோ...
குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் புரிதல் இல்லாததே பிழை, அந்தப் பிழையைச் சரியாகச் செய்திருக்கிறோம்..." என்றார்.
க