ஜேஷன் ஸ்டுடியோஸ் சார்பாக உதயா தயாரித்து நாயகனாக நடித்திருந்த படம் உத்தரவு மகாராஜா. மிகவும் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளிவந்த இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுக்கள் கிடைத்த நிலையிலும், படம் வெளியான அதே நாளில் வழக்கத்தை விட அதிகமான படங்கள் வெளியானதால், உத்தரவு மகாராஜா படத்திற்குப் போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை.
ஒரு நல்ல படம் அதன் நியாயமான வணிக எல்லையைத் தொடவேண்டும் என்பதுடன் அதிகமான ரசிகர்களையும் சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில், கரிஷ்மாட்டிக் கிரியேஷன்ஸ் சார்பாக மணிகண்டன் சிவதாஸ் இந்தப்படத்தை வரும் மே மாதம் மறுவெளியீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறார்.
இளையதிலகம் பிரபு மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க, ஆசிஃப்குரைசி இயக்கியிருக்கும் உத்தரவு மகாராஜா, 150 திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட இருக்கிறது.