சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், நயன்தாரா, அனிருத், லைகா பிரம்மாண்ட கூட்டணியில் “தர்பார்”
சர்காரை அடுத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படம் தர்பார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முதன் முறையாக ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக நயன் தாரா நடிக்கிறார். ரஜினிகாந்தின் 167 வது படமான தர்பாரை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. லைகா நிறுவனம், ரஜினிகாந்துடன் இணையும் இரண்டாவது படம் சர்கார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைகிறார் நயன்தாரா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுப்பிள்ளை அனிருத், பேட்ட யைத் தொடர்ந்து தர்பாருக்கும் இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் 28 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு “தர்பார்” படத்தில் சேர்ந்து பணியாற்றுவது இரண்டாவது முறையாகும். அதே போல் ஏ.ஆர் முருகதாஸுடன் இரண்டு படங்களில் கூட்டணி அமைத்த சந்தோஷ் சிவன் மூன்றாவது முறையாக ஏ.ஆர். முருகதாஸ் அவர்களுடன் இப்போது இணைத்துள்ளார்.
“தர்பார்” படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நாளை தொடங்கி தொடர்ந்து நடக்க உள்ளது. வருகிற ஜனவரி, 2020 யில் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது .