வேல்ஸ் கல்வி குழும நிறுவனரும் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் ஐசரி கே கணேஷ், Kindle Kids Curriculum கிண்டில் கிட்ஸ் பாடத்திட்டத்தை வேல்ஸ் சர்வதேச பாலர் பள்ளியில் தொடங்க வைத்தார். இதற்காகக் கடந்த 10 ஆண்டுகால ஆராய்ச்சியில் ஈடுபட்ட கல்வியாளர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
CBSE , ICSE , IB போன்ற பாடத்திட்டத்தைப் பின்பற்றும் கல்வி நிறுவனங்கள் கூட கிண்டில் கிட்ஸ் பாடத்திட்டத்தால் கவரப்பட்டிருக்கின்றனர்.
ஆசிய நாடுகளே திரும்பிப்பார்க்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடத்திட்டம் வேல்ஸ் சர்வதேச பாலர் பள்ளியில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Kindle Kids Curriculum அறிமுக விழாவில் Hindu In School நாளிதழ் ஆசிரியர் கிருத்திகா ரெட்டி, பிரிட்டிஷ் கவுன்சில் கல்வி பிரிவு தலைவர் ஆண்டனியோஸ்ரகுபான்ஸே மற்றும் இந்திய, சர்வதேச அளவிலான கல்வியாளர்கள் கலந்துகொண்டனர்.
வேல்ஸ் கல்விக்குழுமம் 25000 மாணவர்கள் , 5000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் என்று கடந்த 25 வருடங்களாக தமிழகம், தெலுங்கானா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களில் பாலர் கல்வி முதல் பட்டமேற்படிப்பு வரை ஒரே குடையில் வழங்கி, கல்விச் சேவையாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.