தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் விருதுகளையும் வாங்கிக் குவித்த நடிகர் வசந்த் ரவி, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் "ராக்கி" என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
RA Studios சார்பாக C.R.மனோஜ் குமார் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தப்படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா வில்லனாக நடிக்கின்றார். சமீபகாலமாக, அழுத்தமான கதைகளில், முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த பாரதிராஜா, இந்தப்படத்தில் வில்லனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
தர்புகா சிவா வின் இசையில் வைரமுத்துவும், கபேர் வாசுகியும் இந்தப்படத்திற்காகப் பாடல்கள் எழுதுகிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.