உலகில் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு குட்டி தேசத்தில் உருவாகும் ஆங்கிலப் படங்கள் உலக சினிமா ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து விடுகின்றன. சில நேரங்களில் அந்தந்தப் பிராந்திய மொழிப்படங்களை விட வசூலிலும் சக்கைப்போடு போட்டு விடுகின்றன.
அப்படி இருக்கும் போது உலகிலேயே ஆங்கில மொழி பேசுவோர் அதிகமாக இருக்கும் இந்தியாவிலிருந்து ஏன் ஒரு ஆங்கிலப்படம் உருவாகக் கூடாது..? நியாயமான அதே நேரம் இந்திய சினிமா உலகத்தையே பெருமைப்பட வைக்கும் இந்தக் கேள்வி டீலா நோ டீலா இயக்குனர் ராஜேஷ்க்கு வந்தது.
முற்றிலும் புதுமுக இளைஞர்களை வைத்து ஒரு அழகான திரைக்கதை அமைத்து அதற்கு பெருமான் தி ரஜினிகாந்த் என்கிற பெயரும் சூட்டி விட்டார். முறைப்படி ரஜினிகாந்தைச் சந்தித்து முழுக்கதையையும் சொல்லி அனுமதியும் வாங்கி விட சிங்கப்பூரைச் சேர்ந்த காமாட்சி விஷன் தயாரிப்பாளராக அமைய நான்கு மாதங்கள் முன்பு படப்பிடிப்பு ஆரம்பித்து தமிழில் பெருமான் த ரஜினிகாந்த் என்கிற பெயரிலும் SIX MILLION DOLLARS THE RAJINIKANTH என்கிற பெயரில் ஆங்கிலத்திலுமாக முழுப்படப்பிடிப்பினையும் முடித்து விட்டார்.
இரண்டு இசையமைப்பாளர்கள் விக்ரம் சாரதி(4), லுலுஜி(2) ஆகியோர் 6 பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர். அதில் லுலுஜி இசையமைத்த Life is பிம்பிலாக்கி பிலாக்கி என்கிற பாடல் திரையிடப்பட்டது. பழைய டிராமா, புதிய டிஸ்கோ, குத்து, நையாண்டி எல்லாம் சேர்த்து ஒரு மிக்சரான ஃபார்முலாவில் முயற்சி செய்திருக்கிறார்கள். இன்றைய இளைஞர்களுக்கு நிச்சயம் அது புது அனுபவமாக இருக்கும். அடுத்து வரும் பட்டிமன்றங்களில் பிம்பிலாக்கி பிலாக்கிக்கு அர்த்தம் காணப் பேச்சாளர்கள் தலையைப் பிய்த்துக் கொள்ளக்கூடும். அப்படி மொத்தமாகப் பிய்த்துக் கொண்டால் என்ன இருக்கும் அட ஒண்ணும் இருக்காது... அதான் அதேதான் ஒண்ணும் இல்லை அப்படிங்கிறதுதான் பிம்பிலாக்கி பிலாக்கியோட அர்த்தம்(னு வைச்சுக்கலாம்.)
தமிழ் ரசிகர்களுக்கும் மற்றும் உலகளாவிய ரசிகர்களுக்கும் பிடித்தமான பொதுவான கதையினை விறுவிறுப்பாகத் திரைக்கதை அமைத்து அனுபவ
ஒளிப்பதிவாளர் CJ ராஜ்குமாரின் ஒளிப்பதிவில் இரு மொழிகளில் இயக்கியிருக்கிறார் ராஜேஷ்.
பெருமான் தி ரஜினிகாந்தின் ஆங்கில முகமான Six Million Dollars The Rajinikanth உலகளாவிய அளவில் வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ந்து அதே போன்ற படங்கள் அதிக அளவில் வந்து தமிழ் சினிமாவுக்கு உலக அரங்கில் தனி மரியாதை ஏற்படும்.
அந்தப் பெருமையை இயக்குனர் ராஜேஷ் தட்டிச் செல்வாரா..? அது தான் இன்றைய தமிழ் சினிமா ரசிகனின் Million Dollar கேள்வியாக இருக்கும்.
முன்னதாக இன்று நடைபெற்ற பெருமான் தி ரஜினிகாந்த் பாடல்கள் மற்றும் டிரையலர் வெளியீட்டு விழாவில் அந்தப் படத்தின் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளரும் தொலைக்காட்சியில் பிரபல நடிகையாக மிளிர்பவருமான பிருந்தா தாஸ் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்களைப் பத்திரிக்கயாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
-Vijay Anandh.K
Enjoy the posters of Peruman the Rajinikanth at http://www.mysixer.com/?p=13945