சிம்பு பாணியிலேயே சொல்வதாக இருந்தால், “ நாம எவ்வளவு தூரம் ஏறிப்போறதுங்கிறது முக்கியமில்ல... ரசிகர்களை அதிகப்படசமாகக் குஷிப்படுத்தனும்னாஎவ்வளவு தூரம் இறங்கி வர்றோம்கிறது தான் முக்கியம்...” அந்த அளவுக்கு ஒஸ்திபடத்தினுடைய பாடல்வெளியீட்டு விழா ஒவ்வொரு பிரேமிலும் பொழுதுபொக்கைத்தரும் திரைப்படம் போல ஒவ்வொரு நொடியிலும் பொழுதுபோக்கின் உச்சத்தைத் தொட்டது. நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கிய கான்ஸ்டபிள் 402 ஒஃபீலியா –பிக்பாக்கெட் 420 ஜெகனாகட்டும் அரங்கம் முழுவதும் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களைக் குலுங்கி குலுங்கிச் சிரிக்க வைத்தனர்.பிக்பாக்கெட் ஜெகன் பையை சோதனையிடும் போது பர்ஸ், மொபைல் திருடினது போக ரானா பட ஸ்கிரிப்டையும் திருடி வைத்திருந்தது பர்மா பஜார்ல திருட்டு விசிடி வாங்கித்தமிழ்ப்படங்களுக்கானக் கதைகளைத் திருடுவதை சிம்பாலிக்காகச் சொல்வது போல இருந்தது.
தமனின் அதிரடி இசையில் ஒவ்வொரு பாடலும் அதனைத் திரையில் பாடியவர்களைக் கொண்டேமேடையிலும் பாடப்பட்டன. ஜான்பிரிட்டோவின் குழுவினர் ஆட்ட விருந்து படைத்தனர். பாபாசேகல், ரஞ்சித்,ராகுல் நம்பியார், நவீன் மாதவ், ரிதா, மகதி, தமன் மற்றும் ஒரு பாடலை எழுதியும்பாடியுமிருக்கும் STR ஆகியோர் ரசிகர்கள் முன்னிலையில் பாடினார்கள். ஏ வாடிவாடி என் கியூட் பொண்டாட்டி என்று சிம்புவே எழுதிப் பாடவும் செய்திருக்கும் பாடலைசிம்பு மேடையில் பாடியபோது... “உனக்கு முன்னாடி சத்தியமா என் உசிரு என்னை விடாது...ஏன்னா நான் போய்ட்டா உன்னை யாரும்விதவையா யாரும் பார்க்கக்கூடாது.... “ என்ற வரிகளின் போது அரங்கம்முழுதும் நிறைந்திருந்த பெண் ரசிகர்கள் ஆரவாரித்தின் உச்சத்திற்கே சென்றனர். அந்தப் பாடலின் போது அவர் நடனமும் ஆட ரசிகர்களின் விசில் சத்தம் கிழக்குக் கடற்கரை முழுதும் எதிரொலித்தது. அடுத்ததாக எல்.ஆர்.ஈஸ்வரி மல்லிகாஷெராவத்துக்காகப் பாடிய பாடலில் உடன் பாடிய டி.ஆர் மேடைக்கு அழைக்கப்பட்டு அந்தப் பாடலைப் பாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட அவர் அதனைத் திரையில் பார்த்து ரசித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு தன் ஒரு தலைராகம் முதல் இன்றுவரை அவர் சாதித்த விஷயங்களைப்பட்டியலிட்டு தனி ஆவர்த்தனம் நடத்த புதுமொழியாக ஒரு பழமொழி தோன்றியது. அதாவது தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்... இங்கே குட்டி STR 16 அடி பாய மறுபடியும் தந்தை TR 32 அடி பாய்ந்ததைப்பார்க்க முடிந்தது....இனி இது 64, 128 என்று போய்க்கொண்டேஇருக்கும்... எப்படியோ ரசிகனுக்குப் பொழுது போனால் சரிதானே...
நிகழ்ச்சியின் இறுதியாக தரணியின் மிகப்பெரிய வெற்றிப்படமான கில்லியின் கதா நாயகன் இளையதளபதி விஜய் ஒஸ்தி பாடல்களைவெளியிட மூத்த கவிஞர் வாலி பெற்றுக்கொண்டார்.
-விஜய் ஆனந்த்.K
Enjoy the Photos of this event at http://www.mysixer.com/?p=13903