படம் பார்த்து கதை சொல் என்று கேள்விப்பட்டிருப்போம், அது என்ன, படம் பார்த்து காசு கொடு. சென்னை சைதாபேட்டையில் உள்ள ஸ்ரீநிவாசா திரையரங்கில் காட்டு பய சார் இந்த காளி படத்தின் காட்சிக்கு ரசிகர்கள், டிக்கெட் எடுக்காமல் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
படத்தைப் பார்த்துவிட்டு, ரசிகர்கள் தங்களால் முடிந்த தொகையை திரையரங்கில் வைக்கப்பட்ட உண்டியலில் போட்டனர். இதுகுறித்து காட்டு பய சார் இந்த காளி படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நடிகர் ஜெய்வந்த் கூறியபோது, “உண்டியலில் சேர்ந்த மொத்த தொகையையும் கேரளா நிவாரண நிதிக்கு செலுத்தப்படும்… குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என்று அனைத்து தரப்பினரும் படத்தை ஆவலுடன் பார்த்து ரசித்தது மட்டுமின்றி, ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பணத்தை உண்டியலில் செலுத்தினர்…
எளிய மனிதர்களிடம் தான் எல்லா நல்ல விஷயங்களும் புதைந்து கிடக்கின்றன, மனிதாபிமானமும், நேர்மையும் கொஞ்சம் அதிகமாகவே..” என்று நெகிழ்ந்தார்.