நேரடித்தமிழ்ப் படங்களில் தமிழகத்தில் தமிழில் புழக்கத்தில் இருக்கும் கெட்டவார்த்தைகள் மட்டுமின்றி பிறமொழி கெட்டவார்த்தைகள் மிகவும் சரளமாகக் கையாளப்படும். சென்சார் அதிகாரிகளால் அவை மியூட் செய்யப்பட்டு விடும் என்பது வேறு விஷயம். அதே நேரம் சில “சக்திவாய்ந்த” இயக்குனர்கள் இயக்கியிருக்கும் படங்களில் மட்டும் அவை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். அதிக அளவில் பெண்களும் – குழந்தைகளும் பார்க்கும் தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகளில் சில நடிகர்களை வைத்துக் காமெடி செய்யும் போது கூட...தக்காளி என்று கிண்டல் செய்யும் அளவிற்கு நமது கெட்டவார்த்தைக் கலாச்சாரம் வேர் விட்டு ஆழமாகப் பதிந்திருக்கிறது. கெட்டவார்த்தைகள் என்று எடுத்துக் கொண்டால் அதிலும் அதிகமாக பெண்களையையும், பிறப்புறுப்புக்களையும் மையமாக வைத்துதான் தமிழகம்-இந்தியா ஏன் உலகம் முழுவதும் கெட்டவார்த்தைகள் பேசப்படுகின்றன.
கெட்டவார்த்தைகளால் ஏற்படும் மோசமான விளைவுகளைக் கருத்தில் கொள்ளாத படைப்பாளிகளும்-தயாரிப்பாளர்களும் இருந்து கொண்டிருக்கும் நிலையில் ரா 1 பட இயக்குனர் அதனைக் கையிலெடுத்துக் கொண்டிருக்கிறார். கரினா கபூரை வைத்து அந்தக் கேள்வியினைக் கேட்கிறார், “அது என்ன இந்தியா முழுவதும் பேசப்படும் ஆயிரக்கணக்கான கெட்டவார்த்தைகள் பெண்க்ளை மையமாக வைத்தே பேசப்படுகின்றன” என்று. “I m not responsibility for that…” என்று அப்பாவிக் கணவனாக வ்ரும் ஷாருக்கான் அதில் தப்பித்து விட்டாலும் இந்தக் கேள்வி நம் நாட்டிலும் வெளி நாடுகளிலும் வாழும் அனைத்து ஆண்களிடமும் கேட்டிருப்பதாகவே படுகிறது.
ரா 1 வெளிவந்த பின் அதனைப் பார்த்து ரசித்த பின்... இந்தக் கேள்விக்கான விடையினைக் காண முயல்வோம்... பெண் என்பவள் நமது பாட்டியாக- அம்மாவாக-அத்தையாக- சகோதரியாக-மனைவியாக-காதலியாக-தோழியாக-மகளாக-மருமகளாக இவ்வளவு ஏன் நம் வாழ்வாதாரங்களைப் பெருக்கும் நதிகளாக மற்றும் தெய்வங்களாகவும் நம் வாழ்வில் அமைந்து நம் வாழ்க்கை முழுமை பெற உதவுகிறாள் நம்மை வழி நடத்துகிறாள்.
போக்குவரத்தில்- பொது இடங்களில் இன்னும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நமக்கு எரிச்சலுட்டும் – அல்லது எரிச்சலூட்டுவதாக நாம் நினைத்துக் கொண்டு நம் சக மனிதனை நேரிடையாகத் திட்டாமல்......த்தா, ...யா பையா என்று அவனது தாயாரை அவமானப்படுத்தி திட்டும் வழக்கம் நம் நாட்டில் பரவாலாகக் காணப்படுகிறது.
சிந்திப்போம்...
ரா 1 இல் இந்தக் கேள்வியினைக் கேட்டமைக்காக அதன் இயக்குனர் அனுபவ் சின்கா, தயாரிப்பளர் கெளரிகான் அந்தக் கேள்வியைக் கேட்டு நடித்த கரினா கபூர், ஷாருக்கான் ஆகியோரை மனதராப் பாரட்டுவோம்.
-விஜய் ஆனந்த்.K