புரியாத புதிர், விக்ரம் வேதா, இரவுக்கு ஆயிரம் கண்கள் என்று வித்தியாசமான கதைக்களங்களில் வித்தியாசமான இசையைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் இசையமைப்பாளர் சாம்.சி எஸ்.
தற்பொழுது, கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகிவரும் வஞ்சகர் உலகம் படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்தப்படத்திற்காக ஒரு பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து, அவரை அணுகியிருக்கிறார் சாம் சி.எஸ்.
மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்ட யுவன், அந்த ரொமாண்டிக் பாடலைப் பாட, ஒலிப்பதிவும் செய்யப்பட்டுவிட்டது.
இளம் சாம் சி.எஸ் இன் இசையில் இளைஞர்களின் நாயகன் யுவன் பாடியிருப்பது வஞ்சகர் உலகம் இசை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருகின்றது.
வஞ்சகர் உலகம் இசை, விரைவில்.