12, அக்டோபர், இன்று பிறந்த நாள் காணும் சினேகா காலையில் மயிலாப்பூரில் உள்ள கபாலேஸ்வரர் கோயிலில் தனது பெற்றோருடன் சென்று வழிபட்டார். சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பின்னர் நேராக பார்வையற்றோர் மற்றும் திறன் குன்றியோர் காப்பகத்துக்கு சென்று அவர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். அவர்களின் விருப்பத்திற்கிணங்க ஆட்டோகிராப் படத்திலிருந்து ஒவ்வொரு பூக்களுமே பாட்டை பாடினார். பார்வையற்றவர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து கைத்தட்டி பாடினர். பின்னர் எல்லோரும் ஒருமித்தக் குரலில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அவர்களுக்கான மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களுக்கு தன கையால் பரிமாறினார் சினேகா!
www.mysixer.com தன்னுடைய வாசகர்கள் சார்பாக சினேகாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறிக்கொள்கிறது.