'
பூந்தோட்ட காவல்காரன்' ,'புலன் விசாரணை','கேப்டன் பிரபாகரன்',உட்பட 35 படங்களுக்கு வசனம்,திரைக்கதை வசனம் எழுதியதுடன் 'ஏழைஜாதி', 'பாட்டுக்கொரு தலைவன்','எங்கமுதலாளி' உட்பட 5 படங்களை இயக்கியும் இருப்பவர் லியாகத் அலிகான் .இவர் தற்போது 'ஊராட்சி ஒன்றியம்' என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீதர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தேனிமாவட்டத்தை சேர்ந்த தமிழ்ப் பெண் தமலி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இவர்களுடன் ஆர்.சுந்தராஜன்,கஞ்சா கருப்பு,' ராஜேந்திர நாத், சாதனா, லாவண்யா, ராஜா, ஜெயபால் மற்றும் பலர் நடிக்கின்றனர்.கலெக்டர் கேரக்டரில் முன்னணி நடிகை ஒருவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். எஸ்.சுரேஷ் DFT ஒளிப்பதிவு செய்கிறார்.எஸ்.ஆர்.பிரசாத் இசையமைக்கிறார்.பாடல்களை கலைக்குமார் எழுதுகிறார்.படத்தொகுப்பை சுரேஷ்.எம்.கோட்டீஸ்வரன் கவனிக்கிறார்.கலை-மோகன் ராஜேந்திரன் ,நடனம்-சாகுல்,சுபாஷ். பாண்டிமுனிபிக்சர்ஸ் மற்றும் கேஎம்கே புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கிறார்கள். கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் கே.எம்.கிருஷ்ணமூர்த்தி.
படத்தைப் பற்றி இயக்குனர் கே.எம்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது; "இந்தியாவின் உயிர்நாடி எங்கே இருக்கிறது என்ற போது அது கிராமங்களில் இருக்கிறது 'என்று பதிலளித்தார் காந்தி.'கிராமங்கள் முன்னேறினால்தான் நாடு முன்னேறும்.நாட்டின் பொருளாதார வளர்ச்சி கிராமங்களை வைத்தே மதிப்பிடமுடியும்' என்று காந்தி கடைசிவரை வலியுறுத்தி வந்தார்.நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் கிராமங்கள் சரியாக இருந்தால் தான் நாடு தலை நிமிர்ந்து நிற்க முடியும்.ஆனால் இன்றைய நிலை என்ன..? கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.கிராம மக்களிடம் விழிப்புணர்ச்சி இல்லை. அரசு போடும் திட்டங்கள் கடைக்கோடியில் இருக்கும் கிராமங்களை சென்றடைய வேண்டும். அதற்கு அந்த ஊராட்சி சரியாக செயல்பட வேண்டும். ஊராட்சி மன்றத்துக்கும் ஊராட்சி ஒன்றியத்துக்கும் உள்ள வேறுபாடு கூட நம்மில் பலருக்கு தெரிவதில்லை.இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்கிறார்கள்.ஆனால் அதை செயல்படுத்த நினைப்பதில்லை.
இந்த கருத்தை செய்தியாக சொல்லாமல் புதுக்கோட்டையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில் ஜனரஞ்சகமான கதையோடு சொல்லியிருக்கிறேன். கிராமத்து மக்களின் விழிப்புணர்ச்சியை வலியுறுத்துகிற இக்கதையில் ஒரு சாதாரண கிராமத்து இளைஞன், ஊராட்சி நிலையில் உள்ள சிற்றுரை ஊராட்சி ஒன்றிய நிலைக்கு எப்படி மாற்றி உயர்த்துகிறான் என்பதை காதல், சென்டிமெண்ட்,நகைச்சுவை என சுவாரஸ்யம் கலந்து உருவாக்கியிருக்கிறேன் .
சென்னை,திண்டுக்கல்,கொடைக்கானல்,புதுக்கோட்டை ஆகிய இடங்களில் 90 சதவீத படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது." என்றார்.
தயாரிப்பு, கோவை பி.தாண்டபாணி, இரா சக்திவேல் மற்றும் கே.எம்.கே
Movie Gallery , Heroine Gallery