கடைக்குட்டி சிங்கம் வெற்றிவிழாவில் பேசிய கார்த்தி, “ நல்ல படம் ஓடுவதில்லை என்கிற கருத்து நிலவுகிறது..அது உண்மையல்ல, நல்ல படம் எடுத்தால் அது கண்டிப்பாக ஓடும் என்று ரசிகர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக கடைக்குட்டி சிங்கம் படத்தைப் பொறுத்தவரையில் திரையரங்கில் மல்லி பூ வாசம் மற்றும் குழந்தைகள் அழும் சத்தம் கேட்கிறது என்று சொல்லும் போது படத்துக்கு அனைவரும் குடும்பத்தோடு ஒரு குடும்ப விழாவிற்கு வருவது போலக் கொண்டாடுகிறார்கள் என்பது தெரிகிறது..
மேலும், இனி விவசாயி என்று கெத்தாக போர்டை மாட்டிக்கொண்டு இளைஞர்கள் களமிறங்குவார்கள் என்று கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது…
நாங்கள் ஸ்டாப் STOP என்ற அமைப்பை தற்போது உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் சீனி என்கிற வெள்ளைச் சர்க்கரையை எப்படி நிறுத்துவது..? அதன் மூலம் உருவாகும் டயாபட்டீஸ் போன்ற நோய்களைத் தடுத்து நம்மையும் நம் தேசத்தையும் எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது…. கேன்சரைத் தடுக்கும் ஆற்றல் இருக்கிறது என்று தெரிந்தும், உபயோகம் குறைந்துவிட்ட மஞ்சளை Turmeric ஐ எப்படி தேவையான அளவில் எடுத்துக்கொள்வது…. O for Oils நாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் இயற்கையான மூலப்பொருட்களிலிருந்து தரமாகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றதா என்கிற விழிப்புணர்ச்சியை ஊட்டுவது… Pulses எனும் பருப்பு வகைகள் மற்றும் தானியங்களின் தரம் மற்றும் முக்கியத்துவம் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்துவது STOP அமைப்பின் நோக்கம்..
Made in India , Made in US என்று போடுவது போல, Made in TN by Farmers என்று முத்திரை இருந்தால், அந்தப்பொருட்களை வாங்குவதற்கு இன்னும் உதவியாக இருக்கும்… விவசாய விளைபொருட்களுக்குச் சரியான விலை கிடைத்துவிட்டாலே, விவசாயிகளில் யாரிடமும் கையேந்த வேண்டிய நிலை ஏற்படாது…
இந்தப்படம் எனக்காக இல்லாவிட்டாலும், இயக்கு நர் பாண்டிராஜுக்காகவாவது வெற்றி பெற வேண்டும் என்று மனதார நினைத்தேன். ஏனென்றால், பல வருடங்களாக இந்த ஸ்கிரிப்பிட்டைச் செதுக்கியிருக்கிறார்…” என்றார்.