பாண்டிராஜ் இயக்கத்தில், கார்த்தி-சாயிஷா உட்பட 30க்கும் மேற்பட்ட முன்னணி நடிக நடிகையர் நடிப்பில் வெளிந்த கடைக்குட்டி சிங்கம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துவிட்டது. விவசாயக்குடும்பத்தை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் கார்த்தி , கார்பரேட் நிறுவனங்களில் சம்பாதிப்பவர்களை விட அதிகப் பொருளீட்டும் விவசாயியாக நடித்திருப்பார். அதனால் தானோ என்னவோ, இந்தப்படத்தின் வெற்றியை விவசாயிகளின் வெற்றியாகக் கொண்டாடினார் படத்தின் தயாரிப்பாளர் சூர்யா.
கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றியைப் பற்றிப் பேசிய சூர்யா, “ எல்லா புகழும் இயக்குநர் பாண்டிராஜுக்கே பிளாக் பஸ்டர் மேடையை நான் பார்த்ததே வெகுநாளாகிவிட்டது. இந்த மேடையில் நின்று பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படம், சினிமாவின் மூலம் கண்டிப்பாக நல்ல செய்திகள் பலவற்றை சொல்ல முடியும் என்று நிருபித்துள்ளது. இங்கே நமது தமிழ் நாட்டில் நிறைய டாக்டர்கள் , என்ஜினியர்கள் என்று பலர் உள்ளனர். ஆனால், ஒரு விவசாயியை கொண்டு வருவது கடினமான ஓர் விஷயமாக உள்ளது. இந்த படம் வெற்றி பெற்றதுக்கு முக்கியமான காரணம் ஒருவர் மீது இன்னொருவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் அன்பு தான். எங்களை விட அதிகமாக வேர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான். அதனால் தான் ரூபாய் ஒரு கோடியை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். எல்லோரும் கமர்ஷியலாக படமெடுக்கட்டும் ஆனால் நாங்கள் 2டி மூலம் மக்களுக்கு கருத்து சொல்லும் value based entertainment படங்களைத் தான் தயாரிப்போம் ..”என்றார்.
கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றிவிழாவில், விவசாய மேம்பாட்டுக்காக ரூ 1 கோடியும், விவசாயத்துறையில் சாதனை புரிந்த 5 பேருக்கு தலா ரூ 2 லட்சமும் வழங்கப்பட்டது.