அறிமுக நாயகன் என்றாலும், துணிச்சலாக ஆண் பாலியல்தொழிலாளியாக நடித்து படக்குழுவினரை ஆச்சிரியப்பட வைத்திருக்கின்றார் விக்கி. போத பட அனுபவங்களைப் பற்றிக் கேட்டபோது, “ இரண்டு தலைமுறை முயற்சி என்னை நடிகனாக்கியிருக்கிறது. அதாவது, என் அப்பா சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார், நான் நடிகனாகிவிட்டேன்..? என்று சொல்கிறார் விக்கி.
கும்பகோணம் அரசு கல்லூரியில் பி.டெக் ஐ.டி படிக்கும் போது தான் நடிகனாக ஆகவேண்டும் என்கிற ஆர்வம் அதிகமானதாகச் சொல்லும் ஆர்.எஸ்.விக்னேஷ்ரன் எனும் விக்கி, “என் தந்தை ராஜசேகர் , பல வருடங்களுக்கு முன் 'எத்தனை மனிதர்கள்' உள்ளிட்ட ஒரு சில டி.வி. சீரியல்களில் தலை காட்டிய என் தந்தை குடும்ப பாரம் காரணமாக சினிமா நடிகனாக ஜெயிக்க முடியவில்லை. அவரது நிராசையே எனது லட்சியமாக ஆகிவிட்டது.
காலேஜ் ப்ராஜக்ட் ஒர்க்கிற்காக Project Work வந்த நான், பெசன்ட் நகரில் உள்ள "ஆக்டர்ஸ் ஸ்டுடியோ " வில் நடிப்புப்பயிற்சி எடுத்துக் கொண்டே வாய்ப்புக்காகவும் முயன்றேன்.
வடகறி, அச்சமில்லை அச்சமில்லை, நிலா, உள்ளிட்ட திரைப்படங்களில் சின்னதும் , பெரிதுமான கதாபாத்திரங்களில் நடித்த பிறகு, எனது நண்பர் கணேஷ் மூலம் சுரேஷ் ஜி இயக்கத்தில் "போத" படத்தில் நாயகனாக ஆகும் வாய்ப்பு கிடைத்து..” என்றார்.
Call Boy ஆக நடித்திருக்கின்றீர்களாமே என்று கேட்டபோது, ”அது சும்மா ஒன்றிரண்டு காட்சிகள் தான்.. மொத்த ஸ்க்ரிப்டிலும், சரி தப்பு எதுன்னு தெரியாமல் பொய், திருட்டு என பணத்தை சேஸ் பண்ணிப் போறது தான் என் கேரக்டர். ” என்றார்.
நாயகனாக அதிஷ்டம் கை கொடுத்தாலும், போத படத்தில் டூயட் பாட இவருக்கு யோகம் அடிக்கவில்லை போலும், அட ஹீரோயினே இல்லையே!
போத, ஒரு நகைச்சுவைப்படமாக உருவாகியிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.