நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் முருகன் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் கூத்தன். அறிமுக நாயகன் ராஜ்குமார் , அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் நடித்திருக்கும் இந்தப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு படத்தையும் , நாயகனையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார் இளையதிலகம் பிரபு.
சினிமாவை பின்னனியாகக் கொண்டு இதுவரை நிறையப்படங்கள் வந்திருந்தாலும், சினிமாவில் நடிகர்கள் பின்னால் நடனமாடும் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தை புதிய கோணத்தில் எழுதி இயக்குகிறார் A L வெங்கி. கூத்தன், துணைனடிகர்களின் வாழக்கையை பேசும் படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர்.
இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம், , மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் எனப் பல மூத்த கலைஞர்கள் நடிக்கிறார்கள்.
மாடசாமி ஒளிப்பதிவு செய்யும் கூத்தனுக்கு இசையமைக்கிறார், பாலாஜி.