ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் நான்காவது படம் *லிசா* 3டி. இந்த திகில் படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக Action Heoine நடிகை அஞ்சலி நடிக்கிறார்.
அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கும் இந்தப்படம், அதிநவீன முப்பரிணாமத் தொழில் நுட்பத்தில் ஸ்டீரியோ ஸ்கோப்பில் தயாராகும் இந்தியாவில் தயாராகும் முதல் ஹாரர் திரைப்படம் என்கிற பெருமையைப் பெறுகிறது லிசா.
இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டன. தோசைக்கல்லைத் தூக்கி கேமரா முன் அஞ்சலி வீசவேண்டும், ஆக்ஷன் என்றதும் எதிர்பாராத விதமாக தோசைக்கல் பறந்து வந்து கேமரா அருகில் நின்று கொண்டிருந்த இயக்குநரின் நெற்றியில் பட்டு புருவத்தைக் கிழித்துவிட்டது. இரத்தம் வழிந்தால் என்ன..? 3டி எஃபெக்ட் நன்றாக வந்திருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திய பின்பே , மருத்துவமனைக்கு விரைந்தார் இயக்குநர், ராஜு விஸ்வநாத்.
ஏமாலி படத்தின் நாயகன் ஷாம் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் லிசா மூலம் பாலிவுட்டின் பிரபல நடிகர் மக்ராந்த் தேஷ் பாண்டே தமிழுக்கு அறிமுகம் ஆகிறார், அவர், ரகுவரன் இடத்தை நிரப்ப வாய்ப்பிருக்கின்றது என்கிறார் பிஜி முத்தையா.