இந்து தம்பி இந்த ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்றவர். சினிமாவுக்கு வந்துள்ளார். அனபேலா என்ற படத்தில் அவர் ஹீரோயினாக நடிக்கிறார். நடிகை அம்பிகாவின் தம்பி சுரேஷ் நாயர் கதை எழுத நடிகை அம்பிகா வசனம் எழுதுவதோடு இயக்கவும் செய்கிறார். தென் இந்தியா மீடியா என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து அம்பிகாவின் மற்றொரு தம்பி அர்ஜூன் நாயர் தயாரிக்கிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.
அம்பிகா 80களில் முன்னணி கதா நாயாகியாக நடித்துக் கொண்டிருந்த நேரத்திலும் வார இதழ்களில் தொடர்கள் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில் அறிமுகமாகும் இந்து தம்பி அசின், நயன் தாரா போன்று தமிழ் சினிமாவிலும் நடிக்க ஆவலாக உள்ளார்.