வித்தியாசமான பார்த்திபன் இயக்கத்தில் விவகாரமான மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில் உருவாகும் ஒரு விசித்திரமான படம் தான் “வித்தகன்” என்று விவேக் பேசியது போல வித்தகன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் அந்த மூன்று வி (வித்தியாசம்- விவகாரம்-விசித்திரம்) க்களுடன் தான் நடந்தது. ஜோஷ்வா ஸ்ரீதர் இசையில் முழுக்க முழுக்க பார்த்திபனே எழுதியிருக்கும் 6 பாடல்களை 6 பேர் வெளியிட்டு 6 பேர் பெற்றுக் கொண்டனர். முதல் பாடலை ஹாரிஸ் வெளியிட எமி ஜாக்சன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து கெளதம் வாசுதேவமேனன், அமீர், ஏ.எல்.விஜய், தங்கர்பச்சன், விவேக் அடுத்தடுத்த பாடல்களை வெளியிட முறையே மதுமிதா, சினேகா, தன்ஷிகா, இனியா மற்றும் ரோகினி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அனைத்துப் பாடல்களுமே பிரமாண்டமான பொருட்செலவில் அரங்கத்திலும் வெளி நாடுகளிலும் படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன. “எதைவேணாப் போடு... ஓசோன்ல ஓட்டையப் போடாதே...” என்று ஆரம்பித்து தொடர்ந்து பல விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய “குத்துப்பாட்டு” எதையும் வித்தியாசமாகச் சிந்திக்கும் பார்த்திபனின் சிந்தனைக்கு ஒரு உதாரணம்.
வழக்கத்திற்கு மாறாக சம்பிரதாயமாக விழா ஆரம்பிக்கும் முன்னே கே.ராஜா Under Secretary – Gove of Inida, பிரேமா சந்திரன் Chairman Indo-German Chamber of Commerce, சென்னைப் போலீஸ் கமிஷனர் அவரது மனைவி ஆகியோர் மேடைக்கு வந்து வித்தகனை வாழ்த்தினார்கள். தொடர்ந்து செவன் த் சேனல் மாணிக்கம் நாராயணின் குடும்ப நண்பர்கள் சினேகா, எமி ஜாக்சன், மதுமிதா, இனியா, தன்ஷிகா , ரோகினி ஆகியோர் முதலாவதாக மேடைக்கு அழைக்கப்பட்டு தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த ஹாரிஸ் தொடர்ந்து அமீர், சேரன் உட்பட திரையுலக ஜாம்பவான்கள் அழைக்கப்பட்டனர்.
நகைச்சுவைப் பேச்சுக்களுக்குப் புகழ்பெற்ற பேராசிரியர் ஞானசம்பந்தன் தனது அதிரடி நகைச்சுவைப்பேச்சுடன் விழாவை ஆரம்பிக்க தொடர்ந்து விவேக், வி.என்.சிதம்பரம் ஆகியோரது சரவெடிப் பேச்சுக்களால் வித்தகன் இசைவெளியீட்டு விழா களைகட்டியது. பேசிய அத்துனை சிறப்பு விருந்தினர்களும் மாணிக்கம் நாராயணனைப் பற்றியும், பார்த்திபனின் புதுமையான பிறந்த நாள் பரிசுகளையும் பற்றி அதிகமாகப் புகழ்ந்து தள்ளினர்.
கைதட்டலுக்காக அனைவரும் ஹார்ட் வொர்க் செய்து கொண்டிருக்க இயக்குனர் சுசீந்திரனோ, “பார்த்திபன் சார் பையன் நடித்திருக்கிறார் போல” என்று ஒரே வரியில் சாஃப்ட் வொர்க் செய்து கைதட்டல்களை அள்ளிச் சென்றார்.
பார்வையாளர்களே ஆச்சிரியப்படும் அளவிற்கு சினேகா, எமி ஜாக்சன், மதுமிதா, இனியா, தன்ஷிகா ஆகியோர் சேலை அல்லது சுடிதார் அணிந்து மேடையில் அமர்ந்திருக்க, குட்டைப்பாவடை அணிந்து மேடையில் அமர்ந்திருக்கும் நடிகைகள் எப்படா கால் மீது கால் (அவர்கள் கால் மீது அவர்கள் காலை) தூக்கிப் போடுவார்கள் என்று காத்திருந்து புகைப்படம் எடுக்கும் ஒரு சில புகைப்படக் கலைஞர்கள் பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகினர். அந்த ஏமாற்றம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது என்று கரு.பழனியப்பன் மேடையிலேயே போட்டு உடைத்தார். அதாவது அந்த மாதிரி விவகாரமான படங்களை எடுக்கும் சில புகைப்படக் கலைஞர்கள் அடுத்த நாள் நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினர்களைப் இருட்டடிப்பு செய்து விட்டு அந்த நடிகைகளின் கவர்ச்சிப் படங்களை மட்டுமே வெளியிடுவதால் மேற்கண்ட அத்துனை நடிகைகளையும் முழுதுமாக போர்த்திக் கொண்டு வரச் சொல்லியிருந்த அந்த ரகசியத்தை வெளியிட்டார். கரு.பழனியப்பன் மேடையிலேயே அப்படிச் சொல்லியும் - சேலைதான் கட்டியிருந்தாலும் மேடையில் அமர்ந்திருந்த ஒரு நடிகை எழுந்து கொஞ்ச தூரம் நடப்பதற்குள் வெளியே தெரிந்த அவரது உள்ளாடைகளுடன் கூடிய முதுகின் மீது திடீரென ஃப்ளாஷ் லைட்ஸ்... என்பது குறிப்பிடத்தக்கது.
-Vijay Anandh.K
Enjoy the audio launch photo gallery at http://www.mysixer.com/?p=13643