நிஷாந்த் - ஷிவானி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ஆண்டனி.
பாட்ஷா படத்தையும், அதில் வில்லனாக நடித்த ரகுவரனின் கதாபாத்திரப் பெயரான ஆண்டனியையும் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க இயலாது.
அந்தக் கதாபாத்திரத்தின் பெயரைத் தலைப்பாகக் கொண்ட இந்த படத்திற்கு இன்னொரு பெருமையும் இருக்கின்றது. ஆம், இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் படம் என்கிற பெருமையையும் ஆண்டனி படம் பெறுகிறது.
இது குறித்து இயக்குநர் குட்டி குமார் கூறுகையில்,
மிகவும் குறுகலான இருட்டான இடத்தில் தனியாக மாட்டிக் கொண்டால் ஏற்படும் பயமே கிளாஸ்ட்ரோஃபோபிக். நாயகன், நிஷாந்த் பூமிக்கடியில் ஆறடி ஆழத்தில் காருடன் புதையுண்டு போகிறார்.
அதிலிருந்து அவர் தப்பிக்க மேற்கொள்ளும் போராட்டம் ஒரு திரைக்கதையென்றால்.
.
மேல, சமதளத்தில் இன்னொரு விறுவிறுப்பான திரைக்கதை என்று
இரண்டு கதைகளையும் இணைத்துப் படத்தை இயக்கியிருக்கின்றேன்.
என்றார்.
மலையாள இயக்குநர்- நடிகர் லால் மற்றும் ரேகா நாயகனின் பெற்றோராக நடித்திருக்கிறார்கள்.
ஆண்டனி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க இளைஞர்களே தொழில் நுட்பக் கலைஞர்களாக அறிமுகமாகிறார்கள்.
குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால், 18 வயதே நிரம்பிய - சினிமாவில் எந்தப் பின்புலன்களும் இல்லாத சிவாத்மிகா இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆக அறிமுகமாகிறார்.
இவரது இசையில் உருவான இசை மற்றும் படத்தின் டிரையலரை மூத்த இயக்குநர் நடிகர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்டுச் சிறப்பித்தார்.
விழாவில், தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பன், சந்திரசேகர், இயக்குநர் யுரேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.