முளையுர் ஏ சோனை இயக்கியிருக்கும் படம் புதிய புரூஸ் லீ.
இந்தப்படத்தில் , நாயகனாக அறிமுகமாகிறார் புரூஸ் ஷான்.
படத்தின் தலைப்புக்கு ஏற்றமாதிரி உருவத்தில் மட்டும் புரூஸ் லீ மாதிரி அல்ல, மாறாக 20 வருடங்கள் தீவிரமாகக் கராத்தே கற்றுக் கொண்டு , 100% புரூஸ் லீ யை ஒத்த நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் இவர்.
தனது அனுபவத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, " நான் சென்னைப் பையன் தான். சின்ன வயசிலேயே வேலைக்குப் போயிட்டேன். 1997 இல் என் முதலாளிதான் எனக்கு கராத்தே மாஸ்டராகவும் இருந்தார். மாதக்கட்டணமான ₹ 100 கூட என்னால் அப்பொழுது கொடுக்க முடியவில்லை.
புரூஸ் லீ போன்று வரவேண்டும் சாகும் போது புரூஸ் லீயாகத்தான் சாகவேண்டும் என்பதே என் கனவு.
இயக்குநரும், புரூஸ் லீ ரசிகர், தற்காப்புக் கலையை மையமாக வைத்துப் படம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால், என் கனவும் நனவாகியிருக்கிறது.." என்றார்.