பென் கன்ஸார்டியம் டி.சிவக்குமார் தயாரித்திருக்கும் படம் பக்கா. விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பிந்துமாதவி, ஆனந்தராஜ், சூரி நடித்திருக்கும் இந்தப் படத்தினை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.எஸ்.சூர்யா.
கபிலன், யுகபாரதி எழுதிய பக்காவான பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் சி.சத்யா.
தோனி குமாராக விக்ரம் பிரபுவும், ரஜினி ராதாவாக நிக்கியும் மோதிக்கொள்ளும் டீசர், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என்றால் மிகையாகாது.
செம்பளாப்பட்டி கிராமத்துக்காரரான அறிமுக இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யா பேசும் போது, ' இந்தப்படத்தில் வரும் 52 காட்சிகளும் திருவிழா பின்னணியில் பிரமாண்டமாக எடுத்திருக்கிறோம். முதல் படத்திலேயே 8 கோடி பட்ஜெட் என்பது தயாரிப்பாளர் சிவக்குமாரால் தான் சாத்தியமானது..." என்றார்.
" ரஜினி ரசிகையாக.ஒரு நாயகி கதாபாத்திரம் அமைந்தது புதுமையாக இருந்தது. நிஜத்திலும், நான் தீவிர ரசிகையாக இருப்பதால், கதையைக் கேட்டவுடன் ஒத்துக் கொண்டேன். முதல் தடவையாக நான் கிராமத்துப் பெண்ணாக நடித்திருப்பதும் எனக்கு இனிய அனுபவமாக இருந்தது .." என்றார்.
இலங்கையைச் சேர்ந்த நடிகை சுபாஷினியும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். விக்ரம் பிரபுவின் முதல் இரட்டை வேடப்படம் பக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
பக்கா படத்தின் டீசரை பி.எல். தேனப்பன் வெளியிட்டார்.